போலீஸ் உடையில் ஜொலித்த பாலிவுட் நடிகைகள்

Bookmark and Share

போலீஸ் உடையில் ஜொலித்த பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் திரையுலகம் மட்டுமல்லாது, எல்லா மொழிப்படங்களிலும், ஹீரோயின்கள் வெறும் மோகப்பொருளாக காட்டப்பட்டு வந்த நிலையி்ல், தற்போது தான் அந்த நிலை மாறி, பெண்களை மையப்படுத்திய படங்களாகவும், படத்தில் போலீஸ் கேரக்டர்களிலும் சமீபகாலமாக, வெற்றிக்கொடி நாட்டிவருகின்றனர்.

அவ்வாறு போலீஸ் யூனிபார்மில் ஜொலித்த பாலிவுட் நட்சத்திரங்கள் குறித்து இங்கு காண்போம்... மர்தாணி படத்தில் ராணி முகர்ஜிகடத்தல் கும்பலால் கடத்தப்பட்ட டீன் ஏஜ் பெண்ணை மீட்கும் பெண் போலீஸ் கேரக்டரில், ராணி முகர்ஜி நடித்திருந்தார்.

ஷமய் படத்தில் சுஷ்மிதா சென்முன்னணி தொழிலதிபரின் மர்ம மரணம் மற்றும் அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் துடிப்புமிகு போலீஸ் அதிகாரியாக சுஷ்மிதா சென் நடித்துள்ளார்.

கங்காஜல் 2 படத்தில் பிரியங்கா சோப்ரா பிரகாஷ் ஜா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்காஜல் 2 படத்தில், போலீஸ்  உயர் அதிகாரி கேரக்டரில், பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.

அகிரா படத்தில் கொங்கனா சென் சர்மா ஏக் தி தயான் படத்தில் கடைசியாக நடித்திருந்த கொங்கனா சென் சர்மா, அடுத்ததாக, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள அகிரா படத்தில், போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளார்.

முன்னதாக, இந்த கேரக்டரில் நடிக்க தபுவை அணுகியிருந்தனர். த்ரிஷ்யம் படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்கியிருந்ததால், அவர் மறுக்கவே, அந்த கேரக்டரில் கொங்கனா சென் சர்மா நடிக்க உள்ளார். த்ரிஷ்யம் படத்தில் தபு  மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹி்ந்தி ரீமேக்கில், தபு, போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ளார்.


Post your comment





Related News
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே
தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல்! புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை
தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா
நடு ரோட்டில் லிப்ஸ் டு லிப்ஸ் கிஸ், வசமாக சிக்கிய தளபதி பட நடிகை - புகைப்படம் உள்ளே.!
11 புள்ள பெத்துக்கணும், ஆனால் - தளபதி நாயகியின் விபரீத ஆசை.!
டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions