தாஜ்மஹால் மனோஜை மறந்திடுங்க!

Bookmark and Share

தாஜ்மஹால் மனோஜை மறந்திடுங்க!

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் அறிமுகமானவர் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து கடல் பூக்கள், அன்னக்கொடி என பாரதிராஜா இயக்கிய 3 படங்களில் நடித்த அவர், சமுத்திரம், அல்லி அர்ஜூனா, வருசமெல்லாம் வசந்தம் என மேலும் சில படங்களிலும் நடித்தார். ஆனபோதும், அவரால் ஒரு நடிகனாக வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது வாய்மை, 13 போன்ற படங்களில் நடித்து வரும் மனோஜ், சிவப்பு ரோஜாக்கள்-2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில், தனது கடந்த கால சினிமாவைப்பற்றி மீடியாவினர் யாராவது பேசினால், தாஜ்மஹால் மனோஜை மறந்திடுங்க. இப்ப நான் திரும்பவும் வளர்ந்துகிட்டிருக்கேன்.

நடிகனாக மட்டுமின்றி, இயக்குனராகவும் வந்துக்கிட்டிருக்கேன். அதனால் என்னை தட்டிக்கொடுத்து வளர்த்து விடுங்க என்கிறார். மேலும், இப்போது ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை குறைந்து வித்தியாசமான கேரக்டர்கள் பக்கம் திரும்பியிருக்கும் மனோஜ், படம் இயக்கிக்கொண்டே நடிகனாக வலம் வரவும் விரும்புகிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions