கதாநாயகிகளுக்குள் போட்டி ஏற்பட்டு உள்ளது: தமன்னா

Bookmark and Share

கதாநாயகிகளுக்குள் போட்டி ஏற்பட்டு உள்ளது: தமன்னா

“சினிமா துறையில் கடும் போட்டி இருக்கிறது. கதாநாயகிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஒரு படத்தில் சிறப்பாக நடித்து இருந்தால் இன்னொரு படத்தில் வேறொரு நடிகை சிறப்பாக நடிக்கிறார். எனவே நான்தான் சிறந்த நடிகை என்று யாராலும் சொல்ல முடியாது.

சினிமாவில் எந்த நடிகையும் 100 சதவீதம் சிறப்பான நடிப்பை கொடுத்தேன் என்று திருப்திபட்டுக்கொள்ள முடியாது. ரசிகர்களின் பாராட்டுகளே அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. நான் தமிழ், இந்தியில் தயாராகும் தேவி படத்தில் கஷ்டப்பட்டு நடனம் ஆடி இருந்தேன். அந்த நடனம் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிகிறது. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. நான்பட்ட கஷ்டங்களை இதில் மறந்து போனேன்.

ஆனால் இது எனது திறமைக்கு கிடைத்த பாராட்டு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டேன். என்னை மிஞ்சி இன்னொரு நடிகையாலும் ஆட முடியும். எனது உடல் எடை 50-ல் இருந்து 55 கிலோவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். இதற்காக உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். எடையை கூட்டும் உணவுகளை சாப்பிடுவது இல்லை. ஓட்டலில் ஒரு நாள் வெஜிடபிள் சாலட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். எதிரில் ஒரு பெண் எனக்கு பிடித்த இனிப்பு வகைகளை சாப்பிட்டார்.

அதைப் பார்த்ததும் நாக்கில் நீர் ஊறியது. அந்த சாக்லெட் எனது பிளேட்டில் இருக்க கூடாதா? என்று ஆசைப்பட்டேன். ஓட்ஸ், முளை கட்டிய தானியங்களை சாப்பிடும்போது பூரி மற்றும் எண்ணெயில் செய்த உணவு வகைகளை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவேன். அந்த நேரத்தில் ரசிகர்கள் எனது மனக்கண்ணில் வருவார்கள். அவர்கள் என்னை பார்த்து எப்படி சந்தோஷப்படுகிறார்கள் என்று நினைத்து பார்ப்பேன். அவர்களுக்காக ருசியான உணவுகளை தியாகம் செய்யலாம் என்று மனதை தேற்றிக்கொள்வேன்.”

இவ்வாறு நடிகை தமன்னா கூறினார். 


Post your comment





Related News
இனி நானும் இப்படி தான் நடிப்பேன், தமன்னாவின் அதிரடி முடிவு - ரசிகர்கள் குஷி.!
தமிழகத்தின் 7 வருட வசூல் சாதனையை முறியடித்த பாகுபலி-2, கொண்டாட்டத்தில் விநியோகஸ்தர்கள்
AAA-வில் சிம்புவுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போடும் தமன்னா!
கத்தி சண்டை ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தயாரிப்பாளராகும் தமன்னா!
சிம்பு படப்பிடிப்பில் தமன்னா இணைவது எப்போது?
தெலுங்கில் உருவாகும் விஷாலின் “கத்திச்சண்டை”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions