ரசிகர்களின் பாராட்டே எனக்கு ஆஸ்கர் - தமன்னா

Bookmark and Share

ரசிகர்களின் பாராட்டே எனக்கு ஆஸ்கர் - தமன்னா

தமிழ்த் திரையுலகில் நடுவில் கொஞ்ச நாள் காணாமல் போன தமன்னா, அஜித் ஜோடியாக வீரம் படத்தில் நடித்து மீண்டும் ரீ-என்ட்ரி ஆனால். அந்தப் படம் வந்து ஒரு வருடம் ஆனாலும், தற்போது மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

இவற்றில் பாகுபலி படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க வெளியாக உள்ளது. மேலும், கார்த்தியுடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமன்னா, ரசிகர்களின் பாராட்டுதான் எனக்கு ஆஸ்கார் விருது போன்றது, எனத் தெரிவித்துள்ளார். “ரசிகர்களுடன் படம் பார்ப்பது ஒரு தனி அனுபவம். அவர்கள்தான் உண்மையான ரசிகர்கள், விமர்சகர்கள். அவர்களின் கமெண்ட் என்ன என்பதை தியேட்டருக்குச் சென்று அறிந்து கொள்வதில் எனக்கு அதிகமான விருப்பமுண்டு.

அவர்களுடைய பாராட்டு சிறியதாக இருந்தாலும், அதுதான் எனக்கு ஆஸ்கார் விருது போன்றது. ரசிகர்கள்தான் எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகச் சொல்வார்கள்.

அவர்கள் எனது கதாபாத்திரத்தைப் பற்றிப் பாராட்டிப் பேசும் போது எனக்கு வானத்தில் மிதப்பது போன்று இருக்கும். அவர்களின் சந்தோஷம்தான் என்னையும் அதிக சந்தோஷப்படுத்தும்,” என்று சொல்கிறார் தமன்னா. சீக்கிரமே தமிழ் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த வாருங்கள் தமன்னா.

 


Post your comment





Related News
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் முக்கிய அப்டேட்
அவசரமாக மருத்துவமனை விரைந்த தமன்னா
விருதுகள் மீது ஆசை இல்லை: தமன்னா
பிரபல நடிகருக்காக சண்டைபோடும் காஜல், தமன்னா!
தமன்னாவுக்கு 9வது இடம்; இணைய தள தேடலில்
மகிழ்ச்சியுடன் சென்னைக்கு வரும் தமன்னா!
படம் தோல்வியால் நஷ்டம்: தமன்னா பட விநியோகஸ்தர் தற்கொலை முயற்சி
தமிழில் படங்கள் இல்லை: பின் தங்கிய காஜல், ஸ்ரேயா, தமன்னா
உதயநிதி- நயன்தாராவுடன் இணையும் தமன்னா..!
அடுத்த தமன்னாவாக உருவாகி வருகிறாராம் மனிஷா யாதவ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions