திரை உலகில் போட்டியிருந்தால் மட்டுமே முன்னேற முடியும்-தமன்னா

Bookmark and Share

திரை உலகில் போட்டியிருந்தால் மட்டுமே முன்னேற முடியும்-தமன்னா

தமிழ், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து வரும் தமன்னா திரை உலகில் போட்டி இருந்தால்தான் முன்னேற முடியும் என்று கூறுகிறார். இது குறித்து அவர் கூறுகையில்

'எனது படங்கள் வெற்றி பெறுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக நான் மட்டும்தான் திரை உலகில் இருக்க வேண்டும் என்று விரும்பவில்லை. நான் மட்டும் நடித்தால் ‘போர்’ அடித்து விடும். எனவே என்னைப் போல் எல்லோரும் நடிக்க வேண்டும்.

‘பாகுபலி’ படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்தது. நான் எங்கு சென்றாலும், அந்த படத்தில் நான் நடித்த பாத்திரத்தின் பெயரை சொல்லி அன்புடன் அழைக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது. அடுத்து ‘பெங்கால் டைகர்’ என்ற படத்தில் நடிக்கிறேன்.

தென் இந்திய நடிகைகள் அனைவரும் திறமையானவர்கள். நிறைய நடிகைகள் இருப்பதால்தான் எந்த படத்துக்கு யார் தேவை, யார் திறமைசாலி என்பதை தெரிந்து பொருத்தமான நடிகைகளை இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர்.

நான் இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள வேண்டியது இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது ஒரு அனுபவம் கிடைக்கிறது. என்னுடன் போட்டி போட நிறைய நடிகைகள் வேண்டும். போட்டி இருந்தால்தான் திறமையாக நடித்து திரை உலகில் முன்னேற முடியும்.' என்று அவர் தெரிவித்தார்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions