
கேடி, வியாபாரி, கல்லூரி படங்களில் அப்போதைய வளர்ந்து வந்த ஹீரோக்களுடன் நடித்த தமன்னா, படிக்காதவன் படத்தில் தனுஷ், அயன் படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்தார். இப்படி முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கத் தொடங்கிய பிறகு வளர்ந்து வரும் ஹீரோக்களின் படவாய்ப்புகளை விரட்டியடிக்கத் தொடங்கினார்.
அதேபோல், ரீ-என்ட்ரியில் வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்து தனது ஓப்பனிங்கை ஆரம்பித்த தமன்னா, தற்போது பாகுபலி மெகா படத்தில் நடித்திருப்பவர், ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவரது மார்க்கெட் மறுபடியும் எகிற வாய்ப்பிருப்பதால் பல படங்கள் அவரை முற்றுகையிட்டு வருகின்றன.
அப்படி தமன்னாவை தேடிச்செல்லும் படங்கள் பெரும்பாலும் இரண்டாம்தட்டு ஹீரோக்களின் படங்களாகவே உள்ளதாம். அதுவும் மார்க்கெட் இல்லாத நடிகர்களின் படங்களாம். அந்த படங்களில் நடிக்க தமன்னாவுக்கு தற்போது அவர் வாங்குவதைவிட அதிகபட்ச சம்பளம தருவதாகவும் சொல்கிறார்களாம்.
ஆனால் அதற்கு தமன்னா மசியவில்லையாம். காசுக்கு ஆசைப்பட்டு மார்க்கெட் இல்லாதவர்களுடன் நடித்தால் சீக்கிரமே காணாமல் போய் விடுவோம் என்று அந்த படங்களை திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறார். வருடம் 2 படத்தில நடித்தாலும் போதும் மெகா படம், மெகா ஹீரோக்கள்தான் எனது டார்க்கெட் என்றும் உரக்க சொல்லி வருகிறார் தமன்னா.
Post your comment