பேய் படங்களில் நடிக்க ஆசைப்படும் தமன்னா!

Bookmark and Share

பேய் படங்களில் நடிக்க ஆசைப்படும் தமன்னா!

இந்த தீபாவளி அன்று தனன்னா அளித்த பேட்டியில், ‘‘நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு மும்பையில் அப்பா, அம்மா, அண்ணன் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடினேன். எனக்கு பிடித்த நிறத்தில் சுடிதார் வாங்கி அணிந்தேன். வீட்டில் நானே ரங்கோலி கோலம் வரைந்து தீபம் ஏற்றினேன்.

நான் 10 வயது வரை தீபாவளிக்கு பட்டாசு வெடித்தேன். ஒருமுறை தொலைக்காட்சியில், பட்டாசு தயாரிப்பில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை காட்டினார்கள். அதன்பிறகு நானும் என் அண்ணனும் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை விட்டு விட்டோம்.

இந்த ஆண்டு ‘பாகுபலி’ படம் எனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்தது. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ‘பாகுபலி–2’ படப்பிடிப்பு டிசம்பர் 2–ல் தொடங்குகிறது. இந்த படத்திலும் நான் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கில் தற்போது தயாராகி வரும் ‘தோழா’ படத்தில் கார்த்தி, நாகர்ஜூனாவுடன் நடிக்கிறேன்.

தமிழ் ரசிகர்களை நான் மறக்க மாட்டேன். என் மீது அவர்கள் வைத்துள்ள அன்பு அளவுகடந்தது.

இந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தயாராக இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன். மேலும் பல நல்ல படங்களில் நடித்து விட்டு ரசிகர்களை சந்திக்க வேண்டும். பேய் படங்களில் இதுவரை நடித்தது இல்லை. அதுபோன்ற படங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது” என்றார்.

 


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions