தமன்னாவும் 10 வருட கிளப்பில்...

Bookmark and Share

தமன்னாவும் 10 வருட கிளப்பில்...

தமிழில் அதிகம் நடிக்கவில்லை என்றால் தமன்னாவை மறந்து விடுவோமா என்ன...அப்படி ஒரு மில்க் பியூட்டியை மறந்து விட்டால் நமது ரசிகர்கள் சும்மா விடுவார்களா...தற்போது ஆர்யா ஜோடியாக 'வாசுவும் சரணவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் மட்டுமே நடித்து வரும் தமன்னா, 2005ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் தேதி வெளிவந்த  'சந்த் சா ரோஷன் சேரா' என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து அதே ஆண்டில் 'ஸ்ரீ' என்ற தெலுங்குப் படத்திலும், 2006ம் ஆண்டு 'கேடி' படத்திலும் நாயகியாக அறிமுகமானார். 'கேடி' படம் பெரிய வெற்றியைப் பெறாமல் போய்விட்டது.

அதன் பின் “வியாபாரி, நேற்று இன்று நாளை" ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். இருந்தாலும் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதன் பின் 2007ம் ஆண்டு வெளிவந்த 'கல்லூரி' படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.  

தொடர்ந்து, தனுஷ் ஜோடியாக 'படிக்காதவன்', சூர்யா ஜோடியாக 'அயன்', கார்த்தி ஜோடியாக 'பையா, சிறுத்தை' , பரத் ஜோடியாக 'கண்டேன் காதலை', ஆகிய வெற்றிப் படங்களிலும், 'ஆனந்த தாண்டவம், சுறா, தில்லாலங்கடி, வேங்கை,' ஆகிய தோல்விப் படங்களிலும் நடித்தார்.

இடையில் நடிகர் கார்த்தியை தமன்னா காதலிப்பதாக வந்த வதந்தியை அடுத்து திடீரென தமிழ்ப் படங்களில் நடிக்காமல் ஒதுங்கினார். சுமார் 3 வருடங்கள் கழித்துத்தான்  'வீரம்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இன்றும் இருக்கிறார். விரைவில் அவர் தெலுங்கில் நடித்துள்ள ’பாகுபலி, பெங்கால் டைகர்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா ஆகியோருடன் 10 வருட கிளப்பில் தமன்னாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வயதானாலும் அவர்களின் அழகும், பொலிவும் இன்னும் குறையாமல் இருப்பதே இத்தனை வருடங்களாக அவர்களை முன்னணியில் இருக்க வைத்துள்ளது.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions