அவந்திகாவாக ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா!

Bookmark and Share

அவந்திகாவாக ரசிகர்களைக் கவர்ந்த தமன்னா!

டோலிவுட்டில் தயாராகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி திரைப்படத்தின் புகைப்படங்கள், அப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளன.

பாகுபலி படத்தின் கதாப்பாதிரங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் இயக்குநர் ராஜமௌலி இது வரை வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், நாயகன் பிராஸ், நாயகி அனுஷ்கா, நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சத்யராஜ், நடிகர் சுதீப் என பலரது  கதாப்பாத்திரங்களை இயக்குநர் ராஜமௌலி அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அந்த வகையில் இப்படத்தில் அவந்திகாவா நடித்துள்ள தமன்னாவின் புகைப்படத்தை ராஜமௌலி வெளியிட்டுள்ளார். அழகு பதுமையான அவந்திகாவாக  மாறி இருக்கும் தமன்னாவின் புகைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கின்றார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions