என் திருமணம் சடங்கு சம்பிரதாயப்படியே நடக்கும்- தமன்னா பேட்டி

Bookmark and Share

என் திருமணம் சடங்கு சம்பிரதாயப்படியே நடக்கும்- தமன்னா பேட்டி

தமன்னாவுக்கு தற்போது இந்தி படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. மேலும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது நடை உடை மற்றும் கவர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறார். 

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “சினிமாவில் நான் உயர்ந்தது அதிர்ஷ்டம். எளிமையாக இருக்கவே எனக்கு பிடிக்கும். ஆடைகளையும் அப்படியே தேர்வு செய்கிறேன். சினிமாவில் உடுத்தும் ஆடைகளை, டைரக்டர்களும் ஆடை அலங்கார நிபுணர்களும் முடிவு செய்கிறார்கள். எளிமையாகவும் அதே நேரம் ஸ்டைலாகவும் இருக்கும் ஆடைகளை அணிவேன். 

இந்திய மணப்பெண்கள் இப்போதைய புது யுகத்தில் எந்த மாதிரி தோற்றத்தில் இருக்க வேண்டும் என்று என்னை கேட்டால், அவர்கள் உடுத்தும் ஆடைகளிலேயே தாங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்த்துவதாக இருக்கவேண்டும். ஸ்டைலாகவும் இருக்க வேண்டும். உலகில் எனக்கு பிடித்த மணப்பெண் இளவரசி டயானா தான்.

அவருடைய திருமணம் அதிசயிக்கத்தக்கதாக இருந்தது. அவர் நடை உடை பாவனைகள் அசத்தலாக இருந்தன. சரித்திரத்தில் வரும் மணமகள் போலவே அவர் இருந்தார். எனது மனம் கவர்ந்த மணப்பெண் அவர்தான். எனது திருமணம் ஆடம்பரமாக நடக்காது. அப்படி நடக்கும் திருமணங்கள் எனக்கு பிடிக்காது. என் திருமணம் எளிமையாக நடக்கும். 

எனது அப்பாவும் அம்மாவும் பதிவு திருமணம் செய்து கொண்டவர்கள். நான் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஏதோ ஒருநாளில் நடக்கப்போகும் என் திருமணம் சடங்கு சம்பிரதாயப்படியே நடக்கும்’’. என்று அவர் கூறினார்.

 


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions