இந்தி இயக்குனருடன் திருமணமா? தமன்னா பேட்டி

Bookmark and Share

இந்தி இயக்குனருடன் திருமணமா? தமன்னா பேட்டி

நடிகை தமன்னாவையும், இந்தி டைரக்டர் சாஜித் கானையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவி உள்ளன. சாஜித்கான் இந்தியில் ம்மத்வாலா, ஹம்சகல்ஸ் என்ற இரண்டு படங்களை தமன்னாவை கதாநாயகியாக நடிக்க வைத்து இயக்கினார். 

படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பேசப்படுகிறது. இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:- 

‘‘டைரக்டர் சாஜித்கானும் நானும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவுகிறது. அவர் இயக்கிய ம்மத்வாலா படத்தில் நான் நடித்தேன்.

அந்த படம் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தது. அதன்பிறகும் என்னை ஒதுக்காமல் இரண்டாவது படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். இது அவர் மீது எனக்கு மரியாதையை ஏற்படுத்தியது. இருவரும் நட்பாக பழகினோம். 

படப்பிடிப்பில் என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இதை வைத்துத்தான் இப்படி தவறான தகவல் பரவி இருக்கிறது. எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை. வதந்திகளும் கிசுகிசுக்களும் மக்களை விரைவில் சென்று அடைந்து விடுகிறது. அப்படித்தான் இந்த காதல் வதந்தியும் பரவி இருக்கிறது. இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. 

ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்புகிறேன். பாகுபலி என் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படம். அந்த படத்தில் வாய்ப்பு தந்த டைரக்டர் ராஜமவுலி எனக்கு கடவுளாக தெரிகிறார். இந்தியில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து அங்கேயும் சிறந்த நடிகை என்ற பெயர் வாங்க ஆசை இருக்கிறது. 

எப்படித்தான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அதிர்ஷ்டம் வேண்டும். நல்ல கதை, நேரம், ரசிகர்கள் ஆதரவு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர்ந்து இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு சினிமாவில் எந்த பின்புலமும் இல்லை. ஆனாலும் அதிர்ஷ்டம் இருந்ததால் உயர்ந்தேன்.’’ 

இவ்வாறு தமன்னா கூறினார்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions