புரட்சி நடிகையான கவர்ச்சி நடிகை தமன்னா!

Bookmark and Share

புரட்சி நடிகையான கவர்ச்சி நடிகை தமன்னா!

கமர்சியல் கதாநாயகியான தமன்னா எந்த படமாக இருந்தாலும் கிளாமர் ஏரியா என்று வந்து விட்டால், தங்கு தடையின்றி தாராளம் காட்டி நடிப்பார். அதனால்தான் கமர்சியல் டைரக்டர்களின் மனங்கவர்ந்த நாயகியாகி விட்ட அவரது, சம்பளமும் படத்துக்குப்படம் அவர் கேட்காமலேயே எகிறிக்கொண்டு செல்லும்.

அப்படி கவர்ச்சியை முன்வைத்தே இத்தனை காலமும் பயணித்து வந்த தமன்னா, பாகுபலி படத்தில் முதன்முறையாக எமோஷனல் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு படைக்கு தலைமை தாங்கி நடத்தி செல்லும் புரட்சி பெண்ணாக நடித்திருந்தார். அவரது நடிப்பு, தமன்னாவா இது என்று அனைவரும் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது.

தமன்னா அப்படி நடித்திருந்ததை அவரை கவர்ச்சி புதையலாக மட்டுமே பார்த்த இயக்குனர்களுக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. தமன்னாவா இப்படி என்று அந்த படத்தை ஒரு முறைக்கு பலமுறை பார்த்தவர்கள், தமன்னாவை தொடர்பு கொண்டு பர்பார்மென்ஸ் குறித்து புகழ்ந்து தள்ளி விட்டார்களாம்.

அப்படி தமன்னாவின் எமோஷனல் நடிப்பு குறித்து புகழ்ந்து வரும் டைரக்டர்களில் பையா படத்தை இயக்கிய லிங்குசாமியும் ஒருவர். பாகுபலியில் தமன்னாவின் நடிப்பு ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது என்று கூறும் அவர், எமோஷனலாக நடித்தபோதும் ஒரு ரொமான்ஸ் காட்சியிலும் அசத்தியிருந்தார். அந்த வகையில், பாகுபலி தமன்னாவின் இமேஜை உயர்த்திக்காட்டிய படம் என்கிறார் அவர்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions