புதுமுகங்களால் கடுமையான போட்டி- தமன்னா

Bookmark and Share

புதுமுகங்களால் கடுமையான போட்டி- தமன்னா

புதுமுக நடிகைகள் வரவால் பிரபல நடிகைகள் அக்காள், அண்ணி வேடங்களுக்கு தள்ளப்படுகின்றனர். நயன்தாரா, திரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே 10 வருடங்களை தாண்டியும் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொண்டு உள்ளனர். 

அவர்களும் காதல் படங்களுக்கு பொருத்தம் இல்லை என்று ஒதுக்கப்பட்டு பேய் படங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த போக்கை குறித்து நடிகை தமன்னா தெரிவித்துள்ள கருத்தில், “சினிமாவில் நடிகைகளின் மார்க்கெட் கொஞ்சகாலம்தான். முந்தைய காலங்களில் கதாநாயகிகள் குறைவாக இருந்தனர். போட்டியும் இல்லாமல் இருந்தது. 

இதனால் அவர்கள் கதாநாயகிகளாக அதிக காலம் நீடித்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. புதுமுக நடிகைகள் நிறையபேர் வந்தவண்ணம் இருக்கிறார்கள். போட்டியும் கடுமையாக இருக்கிறது. எனவே, கதாநாயகியாக நிலைத்து நிற்பது சுலபம் அல்ல. 

இந்த போட்டியிலும் நீடிக்கவேண்டும் என்றால் கதாநாயகிகள் இன்னும் தங்களை திறமையாளர்களாக வளர்த்துக்கொள்ளவேண்டும். இப்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப தங்களை புதிதாக மாற்றிக்கொள்ளவும் வேண்டும். நான் ‘பாகுபலி’ படத்தில் அப்படித்தான் என்னை வெளிப்படுத்தினேன். 

அது அற்புதமான படம். எப்போதாவதுதான் அதுமாதிரி படம் அமையும். இதுபோன்ற நல்ல படங்களுக்காக காத்து இருக்கிறேன், நல்ல படங்களில் நான் இருக்கவேண்டும். அதுமாதிரி கதைகளை தேர்வு செய்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions