நள்ளிரவில், பிரபாஸ் ரூம் கதவைத் தட்டிய தமன்னா

Bookmark and Share

நள்ளிரவில், பிரபாஸ் ரூம் கதவைத் தட்டிய தமன்னா

பாகுபலி படம் பற்றி ஏதாவது ஒரு செய்தி தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. இந்தப் படம் வெளிவரும் வரை படத்தைப் பற்றி கூகுள் செய்து பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டுதானிருக்கும்.

இந்தப் படத்தில் நடித்துள்ள அனுஷ்கா, தமன்னா ஆகிய இருவருக்கும் கூட படத்தில் சண்டைக் காட்சிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். தமன்னா படத்தில் இளவரசியாக நடிக்கிறாராம்.

ஒரு போர்க்களக் காட்சியில் அவரும் வாள் சண்டையில் ஈடுபடுவதும் படமாக்கப்பட்டுள்ளதாம். அந்தக் காட்சியில் நடிப்பதற்காக தமன்னாவுக்குத் தனிப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

இருந்தாலும் வாளை எப்படிப் பிடித்துச் சண்டை போட வேண்டுமென படப்பிடிப்பு முடிந்து ஹோட்டல் அறைக்குத் திரும்பிய பின்னும் அவர் தனியாகப் பயிற்சி எடுத்திருக்கிறார்.

இருந்தாலும் வாளைப் பிடிப்பதில் அவருக்கு  சந்தேகம் வந்துள்ளது. அதனால் நள்ளிரவில் அதே ஹோட்டலில் தங்கியிருந்த படத்தின் நாயகன் பிரபாஸ் அறைக்குச் சென்று அவருடைய ரூம் கதவைத் தட்டியிருக்கிறார்.

தூக்கத்திலிருந்து அவரை எழுப்பி, எப்படி வாளைப் பிடிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் முழு ஈடுபாட்டுடன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தமன்னாவின் வழக்கம், அவரின் தொழில்பக்தி பாராட்டுக்குரியது என்கிறார்கள் படக்குழுவினர்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions