கவர்ச்சியாக நடிக்கவும் தயார்-தமன்னா

Bookmark and Share

கவர்ச்சியாக நடிக்கவும் தயார்-தமன்னா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் நடிகை தமன்னா. 1989 டிசம்பர், 21ல், மும்பையில், சிந்தி குடும்பத்தில் பிறந்தவர். 2005ல் திரைப்படங்களில் நடிக்கதுவங்கினார். அவரது சிறப்பு பேட்டி:

தெலுங்கு மற்றும் தமிழில், பிரம்மாண்ட செலவில் உருவாகும், பாகுபலி படத்தில், உங்கள் வேடம் பற்றி சொல்லுங்கள்? படம் துவங்கும்  முன், ஒரு ஆண்டு படத்துக்கான வேலையை, எல்லாருக்கும் பயிற்சியா கொடுத்தாங்க. 

இவ்வளவு பெரிய படத்தில்,  இதுவரை நான் வேலை பார்க்கவில்லை;  நடிகர் பிரபாஸ் ஜோடியா நடிக்கிறேன்.அவந்திகா என்ற வேடத்தில், ராணி வேஷம் போட்டிருக்கேன், உடை, நகை, நடிப்பு இப்படி எல்லாமே இந்த படத்தில் புது அனுபவம். பிரபாஸ் உடல் வாகுக்கு ஏற்றார் போல், மூன்று  கிலோ, வெயிட் போட்டு நடித்தேன். படத்தில் எனக்கு, இரண்டு பாடல் உள்ளது; சண்டைகாட்சிகள் உள்ளன. 

இந்த படத்துக்கு பிறகு, உயரம் என்ற பயம் போயிருச்சு. நான்கு முதல், ஐந்து நாள் வரை  முறையான பயிற்சி பெற்று தான் செய்தேன்.

முதல் முறை ஒரு சரித்திர படத்தில் நடித்தது இனிய அனுபவம். காதல் படத்தில் நடிப்பதற்கும்,வரலாற்று படத்தில் நடிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

நடிப்பு, மொழி, நடை இதுவே வித்தி யாசம் தான். கதாநாயகியாக இல்லை, அந்த கதாபாத்திரமாகவே, ராணி மாதிரி உடை அணிந்ததும் நாம் மாறிடுவோம். நான் மாறி விட்டேன் அவந்திகாவாக.. 

மீண்டும் தமிழில் நடிகர் ஆர்யாவுடன், வி.எஸ்.ஓ.பி.,  படத்தில் நடிக்கிறீர்களே?

இதன் படப்பிடிப்பு முடிந்தது; ஆகஸ்டில் படம்,ரிலீஸ் ஆகும். ரொமான்டிக் காமெடி பண்ணியிருக்கேன், இதுவரை, இந்த மாதிரி நான் பண்ணியதில்லை. தெலுங்கில் நிறைய நடிச்சிருக்கேன், தமிழில் என் வேடம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். 

நடிகர் ஆர்யா என்றாலே, அவர் கொடுக்கும் பிரியாணி; நடிகைகளுக்கு மத்தியில் பெயர் பெற்றவர்.உங்களுக்கும் பிரியாணி கொடுத்தாரோ?

ஆர்யா, படப்பிடிப்பில் ரொம்ப ஜாலியா இருப்பார். அங்கு ராஜேஷ், சந்தானம், ஆர்யாவோட காமெடி, கலகலப்பு பிடிக்கும். இந்த, டீம் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது.

எல்லாரும், ஆர்யா பிரியாணி கொடுத்தாரா? என, கேட்கின்றனர். எனக்கு இதுவரை கொடுக்கவில்லை. படம் வெளியானதும், பெரிய, பார்ட்டி தருவார் என எதிர்பார்க்கிறேன்; பார்க்கலாம். 

படப்பிடிப்பில், ஆர்யா, சந்தானம் சேட்டை தாங்க முடியாதுன்னு நிறைய நடிகையர்  சொல்றாங்களே?

அய்யோ... ஆமாம். நானும், சும்மா இருக்க மாட்டேன். பசங்க மாதிரி அவங்களோட, கலாச்சிட்டு இருப்பேன்; அந்த,டீம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. தெலுங்கில், நீங்க ஸ்ருதி படத்தில்ஆடுறீங்க; ஸ்ருதி உங்க படத்தில்ஆடுறாங்க.

ஆனால், தமிழில் மட்டும் அது மாதிரி பார்க்க முடிவதில்லையே ஏன் என்னை யாரும் கேட்கவில்லை; அதனால் செய்யவில்லை.  தெலுங்கில், நண்பர்கள் அதிகம். நிறைய படங்கள் பற்றி, தகவல் பரிமாறிக் கொள்வோம். 

ஆனால், தமிழில் எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு வரவில்லை. தமிழில், திரும்ப உங்க இடத்தை பிடித்து விடுவீர்களா?

எனக்கு அதெல்லாம் தெரியாது.சிறுத்தைக்கு பின், வீரம் படம் வந்தது. அதுக்கு பின், பாகுபலி அப்புறம் வி.எஸ்.ஓ.பி., படம். நான் துவக்கத்தில் இருந்து நிறைய படங்கள் நடிப்பதில்லை.

நல்ல படமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன். தமிழ், இந்தி, தெலுங்கு என, பிசியா இருக்கேன். அதனால், தமிழில் இடம் பிடிக்கிறது பற்றி எல்லாம் எனக்கு தெரியவில்லை; வரும் படங்களில் நடிக்கிறேன். 

தெலுங்கில் மட்டும் நடிகையர்கவர்ச்சியாக நடிக்கிறாங்க; தமிழில், அடக்க ஒடுக்கமாக நடிக்கிறாங்க என, நிறைய பேர் சொல்கின்றனர்; உங்க பதில் என்ன?

அப்படி எல்லாம் இல்லை.  கதைக்கு என்ன தேவை; அந்த கதாபாத்திரம் எப்படியானது; இயக்குனர் எப்படி அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி மனதில் வைத்திருக்கிறார்;

கவர்ச்சியின் எல்லை என்ன என்று பார்த்து தான் நடிக்கிறோம். மற்றபடி, தமிழ், தெலுங்கு என, வித்தியாசம் பார்க்க வேண்டாம்.

தமிழ், தெலுங்கில், எதில் மிகவும்வித்தியாசமான கதாபாத்திரம்கிடைக்கிறது?

இரண்டிலும் நல்ல படங்கள் வந்துள்ளன.  ஒரே மாதிரி, மசாலா, கமர்ஷியல் படங்கள் இல்லாமல், அப்பப்ப வித்தி யாசமான படங்களில் நடிக்க ஆசைஉள்ளது.  பாகுபலி அதை நிறைவேற்றும் என நம்புகிறேன். 

பிரபல இயக்குனர்கள் படங்களில் தான் நடிக்கிறீர்கள்; புதுமுக இயக்குனர்கள் படங்களில் நடிக்க மாட்டீர்களா? 

அப்படி எல்லாம் இல்லை. தமிழில், இப்போது ஏராளமான திறமையுடன், புதுமுக இயக்குனர்கள் வந்துள்ளனர்.கண்டிப்பா, அவங்க கதை சொல்லி பிடித்து இருந்தால் நடிப்பேன்.  

உங்களுக்கு சரியான போட்டி, தமிழிலா, தெலுங்கிலா?

எங்க போனாலும் போட்டி இருக்கும். எல்லா இடங்களிலும், ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என, நினைக்கிறேன். அது, நம்மை தயார்செய்துள்ள ஒரு  வாய்ப்பு. 

நடிகர் கார்த்தியுடன் மீண்டும் நடிக்கும் அனுபவம்? 

தெலுங்கு, தமிழ் என, இரண்டு மொழிகளிலும் எடுக்கும் படம். நான், கார்த்தி, நாசர் நடிக்கிறோம். பிரெஞ்ச் மொழியில் தயாரிக்கப்பட்ட, இன்டச்சபுள் என்ற படத்தில் இருந்து, ஒரு  சின்ன கதை கரு.

பையா, சிறுத்தை படங்களுக்கு பிறகு கார்த்தியோட நடிப்பது நல்ல அனுபவம். எங்க ஜோடியை, ரசிகர்கள் திரையில்  பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்படுவார்கள். 

எங்களுக்கு படத்தில்,  மிகவும் புதுமையான கதாபாத்திரம். எப்ப ரஜினி,கமலுடன் நடிக்க போறீங்க? 

நான் ஏதும் திட்டம் போடவில்லை. அப்படி, ஒரு வாய்ப்பு வரும்போது கண்டிப்பா நடிப்பேன். இவ்வாறு, நடிகை தமன்னா கூறினார்.


Post your comment

Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions