தமன்னாவை மதுரை பெண்ணாக மாற்றிய சீனுராமசாமி!

Bookmark and Share

தமன்னாவை மதுரை பெண்ணாக மாற்றிய சீனுராமசாமி!

கேடி, தில்லாலங்கடி, அயன், படிக்காதவன், பையா, பாகுபலி உள்பட பல படங்களில் கமர்ஷியல் ப்ளஸ் கவர்ச்சி நாயகியாகவும் மேலும் வேங்கை, வீரம் உள்பட பல படங்களில் அவர் குடும்பப்பாங்காகவும் நடித்திருந்தார் தமன்னா.

தமன்னாவைப் பொறுத்தவரை மண்வாசனை கதைகளில் நடிக்க வேண்டும் என்பதிலேயே கூடுதல் ஆர்வமாம். அப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் பேசப்பட வேண்டும் என்று நினைக்கிறார்.

அந்த வகையில் இப்போது விஜய்சேதுபதியுடன் நடிக்க கிடைத்துள்ள தர்மதுரை படத்தில் தமன்னாவுக்கு அழுத்தமான வேடம் கிடைத்துள்ளது.

சீனுராமசாமி இயக்கி வரும் தர்மதுரை படத்தில் டூயட்டே இல்லாத ஒரு புதுமாதிரியான கதாநாயகியாக நடிக்கும் தமன்னாவை பக்கா மதுரைக்கார பெண்ணாகவே மாற்றி ஆடிசன் நடத்தினாராம் டைரக்டர் சீனுராசாமி. 

அப்போது கனகச்சிதமாக அந்த கெட்டப்புக்கு பொருந்தினாராம் தமன்னா. இதுவரை பார்க்காத மதுரைவாசியாக அவரை பக்காவாக மாற்றி விட்டாராம் சீனுராமசாமி. தற்போது தர்மதுரை படப்பிடிப்பு தேனியில் நடந்து வருகிறது. தமன்னா ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு கலந்து கொள்கிறாராம்.


Post your comment





Related News
மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் தமன்னா
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா!
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
தமன்னா இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சீனுராமசாமி படத்தில் நடிக்கிறாரா ?
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions