பரத்துடன் நடிக்க மறுத்த தமன்னா!

Bookmark and Share

பரத்துடன் நடிக்க மறுத்த தமன்னா!

தாய்மொழியான இந்தியில் கோலோச்ச வேண்டும் என்று முழுவீச்சில் இறங்கிய தமன்னா நடித்த சில படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்ததால் இந்தியில் புதிய படங்கள் கிடைக்காமல் மீண்டும் தென்னிந்திய சினிமாவே கதியென்று வந்து விட்டார். இந்தநிலையில், தமிழில் அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்த அவர் தற்போது ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க மற்றும் பாகுபாலி தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டுமே மெகா படங்கள்தான்.இதையடுத்து தொடர்ந்து தனது லெவலில் இருந்து இறங்கி வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் தமன்னா. குறிப்பாக, இதுவரை வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்க மறுத்த வந்த அவர், தற்போது பரத் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்காக கால்ஷீட் கேட்டபோது, தெலுங்கில் பிசியாக இருக்கிறேன். அதனால் என்னிடம் கால்சீட் இல்லை என்று கதையைகூட கேட்காமல் மறுத்து விட்டாராம். இந்த சேதி பரத்தின் காதுக்கு சென்றபோது,என்னுடன் கண்டேன் காதலை படத்தில் அவர் நடித்தபோது நான் பெரிய ஹீரோ.

இப்போது சின்ன ஹீரோவாகி விட்டேன் போலிருக்கு. சினிமாவில் மார்க்கெட்தான் எல்லா விசயங்களையும் தீர்மானிக்கிறது என்று சொல்லி பீல் பண்ணினாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions