தமன்னாவின் சென்டிமென்ட் ஹீரோ கார்த்தி!

Bookmark and Share

தமன்னாவின் சென்டிமென்ட் ஹீரோ கார்த்தி!

கார்த்தி-தமன்னா இருவரும் இணைந்து நடித்த படங்கள் பையா, சிறுத்தை. இந்த படங்கள் இரண்டுமே ஹிட்டடித்தன. அதோடு அவர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரியும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனால் அவர்களின் கூட்டணி தொடரும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பின்னர் காதல் சர்ச்சைகள் எழுந்ததால், அவர்கள் இணையவில்லை. அதையடுத்து சில டைரக்டர்கள் அவர்களை மனதில் கொண்டு உருவாக்கிய காதல் கதைகளைகூட வேறு ஜோடிகளை இணைத்துதான் படமாக்கினர்.

இந்த நிலையில், இனிமேல் கார்த்தி-தமன்னா இருவரும் இணையவே மாட்டார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது நாகார்ஜூனாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வரும் பெயரிடப்படாத படத்தில் மீண்டும் கார்த்தியுடன் இணைந்திருக்கிறார் தமன்னா. தெலுங்கு டைரக்டர் வம்சி இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தபோது கார்த்தி-தமன்னா இருவரும் முன்பு மாதிரியே ரொம்ப இயல்பாக பழகினார்களாம். அதோடு ரொமான்ஸ் காட்சிகளில் இன்னும் ஈர்ப்பு காட்டியிருக்கிறார்களாம். அதனால் பையா, சிறுத்தையை விட இந்த படம் அவர்களது கேரியரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ரொமான்டிக் படமாக இருக்கும் என்கிறார்கள்.

அதோடு, எப்படியோ மீண்டும் கார்த்தியுடன் இணைந்து விட்ட தமன்னா இனிமேல் அவருடன் கேப் விடாமல தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். இந்நிலையில், நான் கார்த்தியுடன் நடித்த 2 படங்களுமே ஹிட்தான். இந்த படமும் ஹிட்டாகும். அந்த வகையில், அவர் எனக்கு செண்டிமென்டான ஹீரோ என்றும் கூறியுள்ளார் தமன்னா.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions