தகுதியான காதலர் கிடைக்கவில்லை - தமன்னா!

Bookmark and Share

தகுதியான காதலர் கிடைக்கவில்லை - தமன்னா!

நான் காதலிப்பதற்கு இன்னும் தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என நடிகை தமன்னா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, சில பிரச்னைகளால் தமிழ் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தார்.

அஜித்தின் வீரம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியான தமன்னா தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், காதல் பற்றி அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது, பொதுவாக என்னை சந்திப்பவர்கள் எல்லாம் யாரையாவது காதலிக்கிறீர்களா..? எப்போது கல்யாணம் என்று கேட்கின்றனர். அது அவர்களது தப்பில்லை, ஏன்னென்றால் நான் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளாகிவிட்டது.

இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. ஏனென்றால் நான் காதலிக்க தகுதியானவர் இன்னும் கிடைக்கவில்லை.

அப்படி ஒரு நபரை சந்தித்தால் நிச்சயம் அவரை காதலிப்பேன், அவர் யார் என்பதையும் கண்டிப்பாக சொல்வேன். தற்போதைக்கு நான் சினிமாவில் பிஸியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions