இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா

Bookmark and Share

இதுவரை இல்லாத நல்ல வேடங்களில் நடிக்கிறேன்: தமன்னா

விக்ரமுடன் தமன்னா நடித்த ‘ஸ்கெட்ச்’ படம் திரைக்கு வந்துள்ளது. தற்போது, பல புதிய படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து தமன்னா கூறியதாவது:-

“ ‘ஸ்கெட்ச்’ படத்துக்கு பிறகு தமிழில் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் ‘குயின்’ ரீமேக்கிலும் இன்னும் இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். இப்போது என்கைவசம் 5 படங்கள் இருக்கின்றன.

இந்த படங்களில் இதுவரை இல்லாத அழுத்தமான நல்ல வேடங்களில் நடிக்கிறேன். இதுவரை நடிகர்களை மட்டுமே மனதில் கொண்டு கதை எழுதி வந்தார்கள். அந்த நிலை மாறி, நடிகைகளை மனதில் வைத்து கதை எழுதும் காலம் இப்போது உருவாகி இருக்கிறது.

இதன் மூலம், கதை எழுதும் போதே நாயகிகளின் பாத்திரங்களுக்கும் தேவையான அழுத்தமான காட்சிகளை உருவாக்குகிறார்கள். இப்போது நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் நானே எதிர்பார்க்காத அழுத்தமான வேடங்களை கொடுத்திருக்கிறார்கள்.

எனவே, இந்த ஆண்டு நான் நடிக்கும் படங்கள் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படங்களாக அமையும்’’ என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
நாங்களும் இனி இப்படி தான், சமந்தா பாணியில் களமிறங்கிய காஜல், தமன்னா.!
சௌந்தரராஜா – தமன்னா திருமணம் நிச்சயம்!
கோவில் கோவிலாக சென்று பிராத்தனை செய்யும் தமன்னா - ஏன் தெரியுமா?
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
பிரபல முன்னணி தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்ல மாட்டேன், சொல்ல மாட்டேன்னு பாகுபலி 2 கிளைமாக்ஸ் ரகசியத்தை சொன்ன தமன்னா
நடிகைகளை பார்த்து பொறாமைப்பட மாட்டேன்: தமன்னா
விக்ரம் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் `ஸ்கெட்ச்'
ஆம்! அது உண்மை தான் - நடிகை தமன்னா விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions