ரசிகர் மன்றம் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் கதாநாயகிகள்

Bookmark and Share

ரசிகர் மன்றம் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் கதாநாயகிகள்

ரஜினிகாந்த், கமல்ஹாசனில் இருந்து இப்போதைய இளம் கதாநாயகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் வரை நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்த ரசிகர்கள் தங்கள் மானசீக நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும்போது தியேட்டர்களில் கட் அவுட் அமைப்பது, கொடிதோரணங்கள் கட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது என்று அமர்க்களப்படுத்துகிறார்கள்.

சில நடிகர்கள் ரசிகர்களின் பணிகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் முயற்சியாக தங்கள் பிறந்த நாள் விழாக்களில் ரத்ததானம் செய்தல், ஏழைகளுக்கு வேட்டி சேலைகள் மற்றும் உணவு வழங்குதல், மரக்கன்று நடுதல் போன்ற பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவதை வழக்கமாக வைத்து உள்ளனர். நடிகர்களைப்போல் இப்போது நடிகைகளும் ரசிகர்மன்ற பணிகளில் ஆர்வம் காட்டத்தொடங்கி உள்ளனர்.

முன்னாள் கதாநாயகிகள் விஜயசாந்தி, குஷ்பு, நதியா, ரம்பா ஆகியோருக்கு ரசிகர் மன்றங்கள் இருந்து இருக்கின்றன. குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்கள்.

தற்போதைய கதாநாயகிகளில் திரிஷாவுக்கு ஏற்கனவே ரசிகர் மன்றம் தொடங்கி இருக்கிறார்கள். பிராணிகள் நலனை பேணுவது, தெருவோர நாய்கள் பாதுகாப்புக்கு குரல் கொடுப்பது, நாய்களை பிடித்து குளிப்பாட்டி மருத்துவ பரிசோதனைகள் செய்து அவற்றை தத்து கொடுப்பது, பிராணிகள் தங்குமிடங்களை தேடிச்சென்று சுத்தப்படுத்துவது, பிறந்த நாட்களில் புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவுவது போன்ற சமூக சேவைகளில் திரிஷா ஈடுபடுகிறார். இந்த பணிகளில் ரசிகர் மன்றத்தினரையும் ஈடுபடுத்தி வருகிறார்.

அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், தமன்னா உள்ளிட்ட பல கதாநாயகிகளுக்கு ரசிகர்மன்றங்கள் உருவாகி உள்ளன. டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தங்களில் ‘பேன் கிளப்’ என்ற பெயரிலும் ரசிகர்மன்ற அமைப்புகள் முளைத்து இருக்கின்றன. இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “சமீபத்தில் சில ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு ரசிகர்மன்றம் தொடங்கப்போவதாக கூறினார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது” என்றார்.

ரசிகர் மன்றத்தினரை சமூக சேவை பணிகளில் ஈடுபடுத்த நடிகைகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். மன்றங்களுக்கு நிர்வாகிகளை நியமிக்கவும் முடிவு செய்து உள்ளனர். 


Post your comment

Related News
ஹன்சிகா மொத்வானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்!
அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா?
இளைய தளபதியின் ஹீரோயின்கள்? பிறந்தநாள் ஸ்பெஷல்
ஹன்சிகாவுக்கு என்ன ஆனது? செட்டிற்கே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை..
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தை- காதல் முறிவு குறித்து பேசிய ஹன்சிகா
சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவா! என்ன படம் தெரியுமா?
வெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்!
ஆதரவற்ற குழந்தைகளுக்காக புது வீடு கட்டும் ஹன்சிகா!
திரையரங்குகளில் பட்டையை கிளப்பிவரும் போகன் முதல் நாள் வசூல்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions