தமிழ் பேச தமன்னா பயிற்சி

Bookmark and Share

தமிழ் பேச தமன்னா பயிற்சி

தமன்னா 2006–ல் ‘கேடி’ படம் மூலம் தமிழ் திரைஉலகில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புக்கள் வந்ததால் தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி, ஆர்யா என்று முன்னணி நடிகர்களுடன் நடித்தார். 

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவரது தாய் மொழி இந்தி என்றாலும் தமிழில் நன்றாக பேசுகிறார். பட விழாக்களிலும் தமிழில் பேசி அசத்துகிறார். தற்போது ‘தர்மதுரை’ படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்கும் தமன்னா, இதில் மதுரை பெண்ணாக வருகிறார். 

நயன்தாரா சமீபத்தில் வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தில் சொந்த குரலில் ‘டப்பிங்’ பேசினார். தெலுங்கை தாய் மொழியாக கொண்ட ஸ்ரீதிவ்யாவும் ‘பெங்களூர் நாட்கள்’ படத்தில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறார். இது போல ‘தர்மதுரை’ படத்தில் தமன்னா சொந்த குரலில் ‘டப்பிங்’ பேச வேண்டும் என்று இந்த படத்தின் இயக்குனர் சீனுராமசாமி கூறியுள்ளார். 

இதையடுத்து தமன்னா மதுரை தமிழில் வசனம் பேசி நடிக்கிறார். மதுரை பகுதியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பின் போது படக்குழுவினரிடமும் மதுரை தமிழில் பேசி பயிற்சி செய்து வருகிறார்.

மதுரை தமிழ் பேசுவதில் அதிக அக்கறை காட்டும் தமன்னா ‘தர்மதுரை’ படத்தில் சொந்த குரலில் பேசி பரவசப்படுத்துவார் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.


Post your comment





Related News
கம்ப்யூட்டர் என்ஜினியரை திருமணம் செய்யும் தமன்னா?
பிரபுதேவா – தமன்னாவின் படம் இந்த மாதத்தில் முடிவடைகிறது!
பிரம்மாண்டமாக வெளியாகும் தர்மதுரை பாடல்கள்!
3 மொழிகளில் டப்பிங் பேசும் தமன்னா!
அதிக சம்பளம் சம்பளம் கேட்ட தமன்னா, அதிர்ந்த படக்குழு
தென்னிந்திய திரையுலகில் நடிகர்களே கடவுள்கள் : தமன்னா பாட்டியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions