விஷாலின் கத்தி சண்டையில் இணைந்த தமன்னா!

Bookmark and Share

விஷாலின் கத்தி சண்டையில் இணைந்த தமன்னா!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷால் திருடனாகவும் ஜகபதி பாபு வருமான வரித்துறை அதிகாரியாகவும் நடிக்கவுள்ளனர். மேலும் தமன்னா இப்படத்தில் ஜகபதி பாபு மகளாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் நேற்று இவர் கத்தி சண்டை படப்பிடிப்பில் கலந்துகொண்டிருப்பதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions