சொந்தக் குரலில் பேசிய தமன்னா

Bookmark and Share

சொந்தக் குரலில் பேசிய தமன்னா

வட இந்தியாவிலிருந்து வந்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் கற்றுக் கொண்டு சொந்தக் குரலில் பேசும் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்கு குஷ்பு போன்றவர்கள் விதி விலக்கு.

தமிழ்ப் படங்களில் நடிக்க ஆரம்பித்து தமிழைப் பேசக் கற்றுக் கொண்டு, அரசியலில் இறங்கி மேடைப் பேச்சு வரை அவர் சென்று விட்டார். ஆனால், பத்து வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஒரு சிலரோ இன்னும் கூட தமிழை சரிவரப் பேச முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

இப்போதைய இளம் நடிகைகளில் தமிழை நன்றாக பேசக் கூடியவர் தமன்னா. அறிமுகமான கால கட்டத்தில் கொஞ்சம் தட்டுத் தடுமாறி தமிழ் பேசியவர், அடுத்த சில படங்களில் நடித்து முடிப்பதற்குள் நன்றாகவே தமிழ் பேச கற்றுக் கொண்டார்.

'கண்டேன் காதலை' படத்தில் நடித்த போதே அவர் சரளமாகத் தமிழ் பேசுவார். பத்திரிகையாளர்களிடமும் தமிழிலேயே பதிலளிப்பார். இடையில் சிறிது காலம் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழை மறக்காமலே இருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த 'நண்பேன்டா' படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிகை தமன்னாவாகவே நடித்தவர் அவர் நடித்த காட்சியில் சொந்தக் குரலில்தான் டப்பிங் பேசினாராம்.

தற்போது ஆர்யா ஜோடியாக நாயகியாக நடித்து வரும் 'வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில்  சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறேன் என்று கேட்டு வருகிறாராம். தமன்னா சொல்வதை தட்டாமல் இயக்குனர் ராஜேஷ் அதற்கு வாய்ப்பளிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions