ராசியில்லாத நடிகை தமன்னா!

Bookmark and Share

ராசியில்லாத நடிகை தமன்னா!

மும்பையில் இருந்து கோலிவுட்டுக்கு வந்து கோலோச்சி செய்து வரும் நடிகைகளில் தமன்னா, ஹன்சிகா குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக இந்தியில் நடித்தவருக்கு கதாநாயகி வேடம் அங்கே கிடைக்கவில்லை.

ஆனால் தமிழ், தெலுங்கில் கதாநாயகி வேடங்கள் கிடைத்ததை அடுத்து இங்கேயே செட்டிலாகி விட்டார். ஆனால், தமன்னா தென்னிந்திய சினிமாவில் ஒரு முக்கிய கதாநாயகியாக வலம்வந்தபோதிலும், தாய்மொழியான இந்தியில் முன்னணி நடிகையாகியே தீருவது என்று வெறியில் இருந்து வந்தார்.

அதனால்தான் ஹிம்மத்வாலா படத்தில் சான்ஸ் கிடைத்தபோது இந்தி சினிமா தனக்கு கதவு திறந்து விட்டது என்று உற்சாகத்தில் தமிழ், தெலுங்கு படங்களை ஓரங்கட்டி விட்டு பாலிவுட்டுக்கு ஓடினார்.

ஆனால், அவர் நடித்த ஹிம்மத்வாலா மட்டுமின்றி ஹம்சகல்ஸ், எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய இந்தி படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால், இப்போது தமன்னா சான்ஸ் கேட்டு செல்லும் இடங்களில் அவரது தோல்வி ராசியை சொல்லியே திருப்பி அனுப்புகிறார்களாம்.

அதனால், இனிமேல் இந்தி சினிமா பக்கமே செல்லப்போவதில்லை என்று கூறி வரும் தமன்னா, தமிழ், தெலுங்கில் மீண்டும் அழுத்தமாக கால்பதிக்கத் தொடங்கியிருக்கிறார்.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions