கதாநாயகிகளுக்கும் அதிக சம்பளம் தரவேண்டும்: தமன்னா பேட்டி

Bookmark and Share

கதாநாயகிகளுக்கும் அதிக சம்பளம் தரவேண்டும்: தமன்னா பேட்டி

நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- அதிக பணம் தருவதால் புதுமுக நடிகர்களுடன் ஒரு பாடலுக்கு நீங்கள் நடனம் ஆடுவதாக விமர்சிக்கப்படுகிறதே?

பதில்:- ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சாதாரண விஷயம் அல்ல. பாடலும் நடனமும் சிறப்பாக இருந்தால் அதில் ஆடுவது தவறு அல்ல. எனக்கு அதுபோன்ற பாடல்கள் அமைந்ததால் புதுமுக கதாநாயகர்களுடன் ஆடினேன். அதிக சம்பளம் தந்ததால்தான் அவர்களுடன் ஆடினேன் என்று சொல்கிறார்கள். ஆமாம் நிறைய பணம் கொடுத்ததால்தான் ஆடினேன். இதில் என்ன தவறு இருக்கிறது.

எல்லோரும் சம்பளத்துக்காகத்தான் வேலை பார்க்கிறார்கள். சம்பளம் வாங்காமல் வேலை பார்க்கும் ஒருவரை சொல்லுங்கள்? அப்படி யாரேனும் இருந்தால் அவர்கள் கோடீஸ்வரராக இருப்பார்கள். படம் எடுப்பவர்களே சம்பளம் அதிகம் தருகிறோம் ஒரு பாடலுக்கு ஆடி கொடுங்கள் என்று என்னை அணுகுகிறார்கள். நான் அதை ஏற்று ஆடிக்கொடுக்கிறேன். காஜல் அகர்வால், சுருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள்.

கேள்வி:- கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு சம்பளம் தர வேண்டும் என்று இந்தி நடிகைகள் வற்புறுத்தி வருகிறார்களே?

பதில்:- இந்தி நடிகைகள் கோரிக்கையை நானும் வரவேற்கிறேன். கதாநாயகர்களுக்கும் கதாநாயகிகளுக்கும் சம்பள விஷயத்தில் பெரிய ஏற்றத்தாழ்வு இருக்கிறது. கதாநாயகிகளை விட கதாநாயகர்களுக்கு பல மடங்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாற வேண்டும் நடிகைகளுக்கும் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்.

கேள்வி:- கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

பதில்:- சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லா படங்களிலும் நடித்தேன். இப்போது தெளிவாகி விட்டேன். கதையும் கதாபாத்திரமும் வலுவானதாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறேன். பாகுபலி படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தது. அதிரடி காட்சிகளில் நடித்தேன். நான் அப்படி நடித்ததை ரசிகர்கள் ஏற்பார்களா? என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் படம் வெளியாகி எனக்கு பாராட்டுகள் குவிந்ததை பார்த்த பிறகு அதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் மனதில் நிற்பது மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு தமன்னா கூறினார். 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions