சிறுத்தை சிவாவுக்கு தூது விடும் தமன்னா!

Bookmark and Share

சிறுத்தை சிவாவுக்கு தூது விடும் தமன்னா!

இந்தியில் ஹிம்மத்வாலா படம் தமன்னாவை சறுக்கி விட்டபோதும், அதன்பிறகு அவர் நடித்த ஹம்சகல்ஸ், எண்டர்டெய்ன்மென்ட் போன்ற படங்கள் ஓரளவு வசூலித்தன. இருப்பினும், அதையடுத்து தமன்னாவை பாலிவுட் கண்டுகொள்ளவில்லை.

 அதனால் மறுபடியும் தென்னிந்திய சினிமாவை நம்பி வந்திறங்கிய தமன்னாவுக்கு, அஜீத்தின் வீரம் படம் கிடைத்தது பெரிய ஓப்பனிங்காக அமைந்தது. பின்னர், தெலுங்கில் பாகுபாலி, பெங்கால் டைகர் போன்ற படங்களை கைப்பற்றிய தமன்னா, தமிழில் ஆர்யாவுடன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலும் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்.  

இதற்கிடையே, தற்போது புதிய வரவு நடிகைகள் சிலர் மார்க்கெட்டை பிடிக்க முண்டியடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமன்னாவும் தனது அபிமானிகள் சிலரது படங்களுக்கு கல்லெறிந்து வருகிறார்.

அந்தவகையில், சிறுத்தை, வீரம் படங்களில் தன்னை நடிக்க வைத்த சிவா அடுத்து அஜீத்தை இயக்கும் படத்தில் நடிக்கவும் தீவிரமாக முயற்சித்து வரும் தமன்னா, அவருக்கு செல்போனில் எஸ்எம்எஸ் மூலம் தூது விட்டு வருகிறாராம்.

அதேபோல், வேலையில்லா பட்டதாரி படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க தயாராகும் தனுசுடன் மீண்டும் நடிக்கவும் முயற்சி செய்து வரும் தமன்னா, டைரக்டர் சிவா தன்னை செண்டிமென்ட் நாயகியாக கருதக்கூடியவர் என்பதால், மீண்டும் அஜீத் படத்தில் தனக்கு வாய்ப்பளிப்பார் என்று அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறார். 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions