கன்னட படங்களா? ஹீரோயின்கள் ஓட்டம்

Bookmark and Share

கன்னட படங்களா? ஹீரோயின்கள் ஓட்டம்

கோலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து வரும் தமன்னாவுக்கு பாலிவுட் மீது எப்போதும் ஒரு கண் இருந்துகொண்டே இருக்கிறது. ஏற்கனவே இவர் நடித்த ஒன்றிரண்டு படங்கள் கைகொடுக்காத நிலையில் எப்படியாவது ஒரு இடத்தை தக்க வைத்துக்கொள்ள தீவரமாக முயன்று வருகிறார்.

சமீபகாலமாக தென்னிந்திய படங்களின் வாய்ப்பை ஏற்க மறுத்து பாலிவுட் படங்களுக்காக கைநிறைய கால்ஷீட் வைத்து காத்திருப்பதுடன் மும்பையிலேயே அதிக நாட்கள் தங்கியும் இருக்கிறார்.

கன்னட ஹீரோக்கள் புனித் ராஜ்குமார், சூரி ஆகியோரின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த தமன்னா தற்போது தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் ‘ஜக்கு தாதா‘ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் ஸ்கிரிப்ட் சரியில்லை என்று சொல்லி உதறி இருக்கிறார்.

ஆனாலும் தமன்னாவை எப்படியாவது ஒப்பந்தம் செய்யும் நோக்கத்துடன் இயக்குனர் ரவி ஹெக்டே மும்பையிலேயே தங்கி இருக்கிறார்.தமன்னாவுக்கு பதிலாக அமலா பாலை நடிக்க வைப்பதற்கும் இயக்குனர் ரவி முயற்சி செய்து வந்தார்.

ஏற்கனவே 3 படங்களில் நடித்து வருவதால் கால்ஷீட் தர அமலாபாலும் மறுத்துவிட்டார். முன்னதாக ஜக்கு தாதா படத்தில் நடிக்க அனுஷ்காவும் மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions