நகை வர்த்தகத்தில் இறங்கிய தமன்னா

Bookmark and Share

நகை வர்த்தகத்தில் இறங்கிய தமன்னா

திரையுலகின் அழகு பதுமையாக உள்ள நடிகை தமன்னா, தற்போது நகை வர்த்தகத்திலும் களமிறங்கி உள்ளார். அக்ஷய திரிதியை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று தமன்னா, Witengold.com என்ற இணையதளத்தின் மூலம் நகை வர்த்தகத்தை, தமன்னா கோலாகலமாக துவங்கியுள்ளார்.

திரையுலகில், முன்னணி நடிகையாக உள்ள தமன்னா பாட்டியா, தனது தந்தை சந்தோஷ் பாட்டியாவின் உதவியுடன், இணையதள நகை வர்த்தகத்தை துவக்கியுள்ளார்.

இதுகுறித்து தமன்னா கூறியதாவது,

இன்றைய நவநாகரீக பெண்களின் மனஓட்டத்தை கருத்தில் கொண்டு புதுப்புது விதமான நகைகளை, எங்களது இணையதள வர்த்தகத்தின் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்.

எனது இந்த முயற்சிக்கு, அப்பா மிகுந்த உதவியாக இருந்தார். பண்டிகைக்காலங்களில், அதன் தன்மைக்கு ஏற்ப, புதுப்புது விதமான நகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம் என்று தமன்னா கூறினார்.

Witengold.com இணையதளத்தின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள நகைள், நடிகை தமன்னாவின் கைவண்ணத்தில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே
எனக்கு அது நடக்கவே இல்லை - பிரபல நடிகை ஓபன் டாக்.!
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் புதிய அப்டேட்
பாகுபலி 2 ஐ தொடர்ந்து பிரம்மாண்ட படத்தில் நயன்தாரா, அனுஷ்கா?
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்கிறேன்: தமன்னா
ரசிகர்களை கவர்வதற்காக நடிகைகள் நீச்சல் உடை அணியக் கூடாது: தமன்னா
என் சினிமா கனவு நிறைவேறிவிட்டது: தமன்னா
விஜய சேதுபதி, தமன்னாவுக்கு நன்றி , ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டேன்! வைரமுத்து பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions