தமன்னாவை வாழ்த்திய தனுஷ்

Bookmark and Share

தமன்னாவை வாழ்த்திய தனுஷ்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் தமன்னா, நடிப்பு மட்டுமின்றி நகைகளை வடிவமைக்கும் பணியிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

சொந்தமாக நகைகளை வடிவமைக்கும் தொழிலை ஆரம்பித்த தமன்னா, அந்த நகைகளை விற்பனை செய்வதற்காக சொந்தமாக இணையதளம் ஒன்றையும் நேற்று தொடங்கினார்.

http://www.witengold.com/ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மூலம் தான் வடிவமைத்த நகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார் தமன்னா.

இவரது இந்த முயற்சிக்கு சினிமா பிரபலங்களும், பல்வேறு துறையை சார்ந்தவர்களுக்கு தமன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகர் தனுஷும் தமன்னாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, தமன்னா என்னுடைய நல்ல தோழி. மனிதநேயம் மிக்கவர். அவருடைய இந்த புதிய தொழில் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமன்னாவும், தனுஷும் ஏற்கெனவே ‘படிக்காதவன்’, ‘வேங்கை’ ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions