தமன்னா உடன் மீண்டும் ஜோடி சேர்ந்ததால் கிசுகிசு வருமோ? கலக்கத்தில் கார்த்தி

Bookmark and Share

தமன்னா உடன் மீண்டும் ஜோடி சேர்ந்ததால் கிசுகிசு வருமோ? கலக்கத்தில் கார்த்தி

சில வருடங்களுக்கு முன் தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருந்த தமன்னா திடீரென காணாமல் போனார்.  ஆந்திராவுக்குச் சென்று அங்கே தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இத்தனைக்கும் தமிழில் அவர் நடித்த படங்கள் வெற்றியடைந்து கொண்டுதான் இருந்தன. வெற்றியை காசு பண்ணாமல் தமன்னா ஏன் தெலுங்குப் பக்கம் போனார்? என்ற கேள்வி அப்போது திரையுலகில் எழுந்தது. அயன் படத்தில் சூர்யா உடன் இணைந்து நடித்த தமன்னா, பிறகு கார்த்தி உடன் பையா, சிறுத்தை ஆகிய படங்களில் ஜோடியாக நடித்தார்.

இரண்டு படங்களில் கார்த்தி உடன் ஜோடி சேர்ந்ததினால் தமன்னாவுக்கும் கார்த்திக்கும் காதல் என்ற கிசுகிசு எழுந்தது. அது கார்த்தி வீட்டில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியதாக அப்போது சொல்லப்பட்டது.

அதன் காரணமாகவே தமிழ்ப்படங்களே வேண்டாம் என்று தமன்னா தெலுங்குப்பக்கம் போனார். பிறகு வீரம் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார் தமன்னா.

இந்நிலையில், கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகும் படத்தின் கதாநாயகியாய் நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

கடைசிசேரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டதால் தற்போது தமன்னா கதாநாயகியாக அதாவது கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். தமன்னா உடன் மீண்டும் இணைந்ததை வைத்து மறுபடி கிசுகிசு வந்துவிடுமோ என்ற கலக்கத்திலும் இருக்கிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions