முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள தமன்னா...!

Bookmark and Share

முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள தமன்னா...!

தமிழ்த் திரையுலகில் தற்போதுள்ள முன்னணி ஹீரோயின்களில், இன்றைய முன்னணி இளம் ஹீரோக்களுடன் நடித்துள்ள ஒரே ஹீரோயின் என்ற பெயரை தமன்னா மட்டுமே பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தாலும், குவிக்கவில்லை என்றாலும் இளம் முன்னணி நடிகர்களாகப் பேசப்படுபவர்கள் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ்.

இவர்களுடன் இணைந்து நடித்துள்ள ஒரே நடிகை தமன்னா மட்டுமே. இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான். விஜய்யுடன் 'சுறா' படத்திலும், அஜித்துடன் 'வீரம்' படத்திலும், சூர்யாவுடன் 'அயன்' படத்திலும், கார்த்தியுடன் 'பையா' படத்திலும் தனுஷுடன் 'படிக்காதவன்' படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது ஆர்யாவுடன் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தில் நடித்து வருகிறார். மற்ற ஹீரோயின்களுடன் ஒப்பிடும் போது தமன்னாவிற்குத்தான் முன்னணி இளம் ஹீரோக்களுடன் நடித்துள்ள அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

மற்ற ஹீரோயின்களான ஹன்சிகா இன்னும் அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோருடன் ஜோடி சேரவில்லை. சமந்தா விஜய்யுடன் மட்டும்தான் நடித்துள்ளார், தனுஷுடன் இனிமேல்தான் நடிக்கப் போகிறார்.

ஸ்ருதிஹாசன் நாம் குறிப்பிட்டுள்ளவர்களில் சூர்யா, தனுஷுடன் நடித்துள்ளார். கார்த்தியுடன் இனிமேல்தான் நடிக்கப் போகிறார். விஜய்யுடன் தற்போதுதான் நடித்து வருகிறார்.

விஜய், சூர்யா, அஜித், தனுஷ் ஆகியோருடன் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார், கார்த்தியுடன் இன்னும் நடிக்கவில்லை. அஜித், விஜய், சூர்யா, ஆகியோருடன் மட்டும் த்ரிஷா நடித்துள்ளார், இன்னும் கார்த்தி, தனுஷ் ஆகியோருடன் நடிக்கவில்லை.  மேலே சொன்ன லிஸ்ட் படி பார்த்தால்,  இப்ப தமிழ் சினிமாவுல யாரை முன்னணி ஹீரோயின்னு சொல்றது... !


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions