காதலர் தினத்தை கொண்டாடுவது தவறல்ல: தமன்னா, சமந்தா பேட்டி

Bookmark and Share

காதலர் தினத்தை கொண்டாடுவது தவறல்ல: தமன்னா, சமந்தா பேட்டி

காதலர் தினத்தை கொண்டாடுவது தவறல்ல என்று தமன்னா, சமந்தா கூறினார்.

இது குறித்து தமன்னா அளித்த பேட்டி வருமாறு:–

காதல் என்பது சொல்லில் வர்ணிக்க முடியாத ஒரு அற்புதம். நமக்காக ஒருத்தர் இருக்கிறார் என்று நினைக்கும் போதே பெருமிதமாக இருக்கும். அழகான காதல் படங்களை பார்க்கிற போது நாமும் அதில் வாழ்வது போன்ற சந்தோஷம் கிடைக்கும்.

அதுவே சுகமான அனுபவம். காதல் படங்கள் எப்போது ரிலீசானாலும் நன்றாக ஓடுகின்றன. ரசிகர்களும் விரும்பி பார்க்கிறார்கள். நான் காதல் சம்பந்தப்பட்ட படங்களை அதிகம் பார்ப்பேன். காதல் பாடல்களையும் அதிகம் கேட்பேன். காதலர் தினத்தை காதல் ஜோடிகள் கொண்டாடுகிறார்கள். அது தவறு அல்ல.

இவ்வாறு தமன்னா கூறினார்.

காதலர் தினம் பற்றி சமந்தா கூறியதாவது:–

காதல் உயர்வானது அற்புதமானது. அனைத்து மொழிகளிலும் காதல் படங்கள் வருகின்றன. அவற்றை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

காதல், இதயம் சம்பந்தம் உள்ள படங்களில் நடித்து இருக்கிறேன். என் முதல் 3 படமே காதல் படம் தான். காதலை டைரக்டர் கவுதம்மேனன் பிரமாதமாக திரையில் கொண்டு வருவார்.

மணிரத்தினத்தின் காதல் படங்களை பலமுறை பார்த்து இருக்கிறேன். முழுக்க முழுக்க காதல் படமொன்றில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது. அந்த படத்தில் காதல் தவர வேறு எதுவும் இருக்க கூடாது.

காதலர்களுக்கு தினம் தினம் காதலர் தினம் தான். அதை தவறாக நான் பார்க்கவில்லை.

இவ்வாறு சமந்தா கூறினார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions