மோசமான நடிப்புக்கும் விருது: தமன்னா, சோனாக்சி தேர்வு

Bookmark and Share

மோசமான நடிப்புக்கும் விருது: தமன்னா, சோனாக்சி தேர்வு

சிறந்த நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஒரு அமைப்பு மோசமாக நடித்தவர்களையும் தேர்வு செய்து விருது வழங்குகிறது. அந்த விருதின் பெயர் ‘கோல்டன் கேலா’. பர்மா என்பவர் இதை துவங்கினார். கடந்த சில வருடங்களாகவே இந்த விருதுகளை அவர் வழங்கி வருகிறார். நடிகர் நடிகைகள் ஜாலிக்காக இந்த விருதை நேரில் சென்று வாங்குகிறார்கள்.

கடந்த வருடத்தில் மோசமாக நடித்த நடிகர் நடிகைகளுக்காக விருது வழங்கும் விழா டெல்லியில் அடுத்த மாதம் நடக்கிறது.

மிகவும் மோசமாக நடித்த நடிகை விருது சோனாக்சி சின்ஹாவுக்கு வழங்கப்படுகிறது. தமிழில் ரஜினியுடன் ‘லிங்கா’ படத்தில் நடிக்கவே தெரியாமல் மோசமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும் இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன், ஹாலிடே படங்களில் மோசமாக நடித்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.

என்டர்டெய்ன்மென்ட் இந்தி படத்தில் மோசமாக நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கு மோசமான நடிகை விருது வழங்கப்படுகிறது. இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் படத்தை எடுத்த பிரபுதேவாவுக்கு கடந்த வருடத்தின் மோசமான டைரக்டர் விருது வழங்கப்படுகிறது.

ராணிமுகர்ஜி, கத்ரினா கைப் போன்றோரும் சல்மான்கான், சயீப் அலிகான் போன்றோரும் மோசமான நடிகை, நடிகர் விருதுகளை பெறுகிறார்கள், இந்த விருதுகளை தயக்கம் இல்லாமல் நேரில் போய் வாங்கவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!
வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions