தமன்னா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!

Bookmark and Share

தமன்னா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!

தோழா மற்றும் தர்மதுரை படங்களின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு நடிகை தமன்னாவின் மார்க்கெட் கடகடவென உயர்ந்துள்ளது. இதுவரை தென்னிந்திய மொழிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது பாலிவுட்டிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தோழா மற்றும் தர்மதுரை படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத தமன்னா, தேவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மட்டும் கலந்துகொண்டு படத்தைப் பற்றி உயர்வாக பேசினார்.

இதனால் கடுப்பான தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ், தமன்னா மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருப்பதாக இன்று காலை முதல் இணையத்தில் ஒரு செய்தி சுழன்று வருகிறது. ஆனால் சுரேஷ் இதை தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions