நவ.,27-ல் தமாசா ரிலீஸ்

Bookmark and Share

நவ.,27-ல் தமாசா ரிலீஸ்

இம்தியாஸ் அலி இயக்கியுள்ள தமாஷா படம் நவம்பர் 27ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சயித் நடியாவாலா தயாரிப்பில், இம்தியாஸ் அலி இயக்கத்தில், ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகி வரும் படம் தமாசா.

இப்படம் இந்தியாவில் பல மாநிலங்களிலும், இந்தியா தவிர்த்து பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை வெளியிடும் யுடிவி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, யுடிவி மற்றும் நடியாவாலா நிறுவனங்கள் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். தமாசா படம் நவம்பர்  27ம் தேதி ரிலீஸாகும் என்று கூறியுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions