ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுக்கு மாறும் ஜீவா

Bookmark and Share

ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுக்கு மாறும் ஜீவா

யான் படத்தின் படு தோல்விக்குப் பிறகு துவண்டுபோயிருந்த ஜீவா தற்போது மீண்டு வந்தது மட்டுமல்ல 3 படங்களில் நடிக்கும் அளவுக்கு பிஸியாகவும் இருக்கிறார்.

கருணாஸ் நடித்த   அம்பா சமுத்திரம் அம்பானி படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து திருநாள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஜீவா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் இயக்குனர் ராம் பிரகாஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், யாமிருக்க பயமே டீகேயின் இயக்கத்தில்  கவலை வேண்டாம் படத்திலும் நடிக்கவிருக்கிறார். எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் கவலை வேண்டாம்  படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் ஜீவாவின் கேரக்டர் செம யூத்தாக மட்டுமல்ல, யூத் பட விஜய்யின் கேரக்டரைப்போல வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகவிருக்கும் கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுக்கும் சமையல்கலை நிபுணர் (Chef) வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

சமீபத்தில் ஜீவாவும், கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்ட ஃபோட்டோஷூட் இப்படத்திற்காக நடைபெற்றுள்ளது.  கவலை வேண்டாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

திருநாள் படத்துக்காக 80களில் உள்ளது போன்ற ஹேர்ஸ்டைல் வைத்துள்ள ஜீவா 'கவலை வேண்டாம் படத்திற்காக விரைவில் தன் ஒரிஜினல் ஹேர்ஸ்டைலுக்கு மாற இருக்கிறார்.


Post your comment





Related News
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions