2014 ம் ஆண்டு திரைப்பட சாதனையை முறியடிக்குமா 2015?

Bookmark and Share

2014 ம் ஆண்டு திரைப்பட சாதனையை முறியடிக்குமா 2015?

ஒரு ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்த அளவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டப் போகிறது. 
2014ம் ஆண்டு மொத்தம் 209 படங்கள் வெளிவந்தது, இந்த ஆண்டில் அந்த எண்ணிக்கை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் வரை 199 படங்கள் வெளிவந்துள்ளன. இந்த வாரம் தங்கமகன், கொக்கிரகுளம் ஆகிய இரண்டு படங்கள் வெளிவர இருப்பதால் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிடும்.

அடுத்த வாரம் வில் அம்பு, அஞ்சல, பூலோகம், பசங்க 2 ஆகிய படங்களும், 25ம் தேதி வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் படமும் வெளிவர உள்ளன. எனவே அவற்றையும் சேர்த்தால் 206 ஆகி விடும். 

25ம் தேதிதான் இந்த ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமை என்பதால் அன்றைய தினம் மேலும் சில படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. அப்படி மேலும் சில படங்கள் வெளியானால் மட்டுமே 2014ன் சாதனையை 2015 முறியடிக்க முடியும். 

தமிழ்த் திரையுலகில் ஒரு வருடத்தில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் 2014ம் ஆண்டுதான் சாதனை ஆண்டாக உள்ளது. கடைசி வெள்ளிக்கிழமை அன்று ஏதேனும் படங்கள் வெளியானால் 2014 ம் ஆண்டு சாதனையை 2015ம் ஆண்டு முறியடித்து விடும்.


Post your comment





Related News
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
சமீபத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர் நடுத்தெருவில் இருக்கிறார்! முன்னணி ஹீரோவை தாக்கி பேசிய தயாரிப்பாளர்
தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது- முழு விவரம் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions