ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்

Bookmark and Share

ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்

கடந்த 2010ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான ‘தமிழ்ப்படம்’ பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்படங்களையும், நடிகர்களையும் கிண்டல் செய்து நகைச்சுவை காட்சிகளை அமைத்திருந்தார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். அண்மையில் ’தமிழ்ப்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ’2.0’ . இந்த தலைப்பை ’தமிழ்ப்படம்’ இரண்டாம் பாகத்தில் சேர்த்து அட்ராசிட்டி செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். படத்தின் முதல் போஸ்டரில் டிசம்பர் 11ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் அதற்கு அடுத்த நாளே (26.05.2018) தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் ’Official Piracy Partner - தமிழ் ராக்கர்ஸ்’ என்று குறிப்பிட்டிருந்தனர். 

தமிழ் ராக்கர்ஸ், 2.0.. இவற்றை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டு அரசியலை கிண்டலடிக்கும் வகையில் மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளது ’தமிழ்படம் 2.0’ படக்குழு. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் ஓ.பன்னீர்செல்வம் தியானம் இருப்பது போன்ற புகைப்படம் தமிழகமெங்கும் பிரசித்தி பெற்றது. அதே போன்று சிவா அமர்ந்திருப்பது போன்று இப்போஸ்டரை வடிவமைத்திருக்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Post your comment

Related News
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
இந்து கடவுளை அவமதித்த பிரபல தமிழ் டிவி சீரியல்! போலீசில் புகார்
தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் - தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions