நகுலுக்கு, 'தமிழுக்கு எண்...' திருப்பத்தைத் தருமா...?

Bookmark and Share

நகுலுக்கு, 'தமிழுக்கு எண்...' திருப்பத்தைத் தருமா...?

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படத்தில் சித்தார்த், பரத், தமன், நகுல், மணிகண்டன் ஆகிய ஐவரும் நாயகனாக அறிமுகமானார்கள். இவர்களில் தமன் தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

சித்தார்த் கொஞ்ச காலம் தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழில் முன்னணி இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார். பரத் தமிழில் ஒரு சில வெற்றிப் படங்களைக் கொடுத்து பின்னர் பின் தங்கிவிட்டார்.

மணிகண்டன் நடுவில் பல வருடங்கள் வாய்ப்புகளே இல்லாமல் இருந்தார். கடந்த ஆண்டு வெளிவந்த 'காதல் 2014' படத்தில் வில்லனாக நடித்தார். நகுல் 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் தனி நாயகனாக பெயர் பெற்றார்.

தொடர்ந்து "மாசிலாமணி, கந்த கோட்டை, நான் ராஜாவாகப் போகிறேன், வல்லினம்” ஆகிய படங்களில் நாயகனாக நடித்தாலும் அந்தப் படங்கள் எதுவுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை.

தற்போது நகுல் இரு கதாநாயகர்களில் ஒருவராக நடித்துள்ள 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இந்த்ப் படத்தை நகுல் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம்.

படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிடுவதால் படம் மீது மற்றவர்களின் கவனம் அதிகம் வர வாய்ப்புள்ளது என்றும் நினைக்கிறாராம். நான்கு தோல்விகளைக் கொடுத்த பின்னும் நகுல் நம்பிக்கை வைத்துள்ள ஒரே படம் இதுதானாம்.

இந்தப் படம் வெற்றி பெற்றால் அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'நாரதன், அமளி துமளி' ஆகிய படங்களுக்கும் நல்லது நடக்கும் என்று ஆர்வத்துடன் இருக்கிறார் என்கிறார்கள். நம்பிக்கதானே வாழ்க்கை...நகுல்...!


Post your comment





Related News
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
என் காலத்திலும் செக்ஸ் டார்ச்சர் இருந்தது - மீனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions