ரகசிய திருமணம் செய்து கொள்வேன்: டாப்சி

Bookmark and Share

ரகசிய திருமணம் செய்து கொள்வேன்: டாப்சி

'ஆடுகளம்' மூலம் தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனவர் டாப்சி. தற்போது தெலுங்கில் பிசியான நாயகியாக இருந்து வருகிறார். இந்தி படங்களிலும் நடிக்கிறார்.

இவர் சொந்தமாக தொழில் தொடங்கி அதையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது தங்கை ஷகுன், தோழி பாரா ஆகியோருடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும் இவரது நிறுவனம் வேகமாக வளர்ந்து வருகிறது.

சொந்த தொழிலில் ஆர்வம் காட்டிவரும் டாப்சி இப்போது தனது வாழ்க்கைக்கும் துணையை நிச்சயம் செய்து இருக்கிறார். டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மதியாஸ்போ என்பவரை தீவிரமாக காதலிக்கிறார். இருவரும் ரகசியமாக சந்திக்கிறார்கள். அடிக்கடி சேர்ந்தே சுற்றுகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து கூறியதாவது:–

"சில திரையுலக பிரபலங்கள் ரசிகர்களுக்கு தெரியாமல் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது எனக்கு புரிகிறது. என் திருமணம் சில ஆண்டுகள் கழித்துதான் நடைபெறும்.

எனது திருமணம் உலகம் எல்லாம் தெரியும் வகையில் நடக்காது. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மட்டும்தான் நடக்கும்" என்றார்.

 

 


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions