ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி

Bookmark and Share

ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி

நடிகை டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

‘‘ரசிகர்களில் பல வகை இருக்கிறார்கள். சிலர் நடிகைகளுடன் ‘செல்பி’ எடுத்துக்கொள்ள விரும்புவார்கள். இன்னும் சிலர் ‘ஆட்டோகிராப்’ கேட்டு வாங்குவார்கள்.

மூன்றாவது ரக ரசிகர்கள் நடிகைகளை தொட்டுப்பார்க்கவும், அவர்களிடம் கைகுலுக்கவும் ஆசைப்படுவார்கள். இவர்களை தவிர இன்னொரு மோசமான வகை ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர்கள் போனில் அடிக்கடி பேசி தொந்தரவு கொடுப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு ரசிகரின் தொல்லையை நான் அனுபவித்தேன். எனது சகோதரியுடன் சேர்ந்து திருமணங்களை நடத்தி கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறேன். இதற்காக நிறைய பேர் எனக்கு போன் செய்கிறார்கள். அலுவலகத்துக்கும் பலர் இது சம்பந்தமாக போன் செய்து பேசுகிறார்கள்.

இதுமாதிரி எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் கொல்கத்தாவில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக்கொண்டார். தனது திருமணத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுக்கும்படியும் அதற்கான கட்டணத்தை தந்து விடுவதாகவும் கூறினார். நான் சரி என்றேன்.

பிறகு அந்த நபர் இந்த வேலைக்கான ஒப்பந்தத்தை எனது நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்றால் நான் அவரது திருமணத்துக்கு சிறப்பு விருந்தினராக நேரில் வர வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். நான் மறுத்து விட்டேன். அதன் பிறகு அவருடைய போனை எடுக்கவில்லை.

விசாரித்தபோது அந்த நபருக்கு திருமணமே நிச்சயமாகவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு வேறு நம்பரில் இருந்து குரலை மாற்றி பேசி, ‘‘நான் ஒரு தயாரிப்பாளர், உங்களை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன். டைரக்டரை அனுப்பி கதை சொல்ல வைக்கிறேன்’’ என்றார். அந்த ரசிகரின் போன் தொல்லையால் நிம்மதியில்லாமல் சில நாட்கள் கஷ்டப்பட்டேன்.’’

இவ்வாறு நடிகை டாப்சி கூறினார்.


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions