பெற்றோர் சம்மதித்தால் ஆண்களைப் போல் பைக் ஓட்டுவேன்: நடிகை டாப்சி

Bookmark and Share

பெற்றோர் சம்மதித்தால் ஆண்களைப் போல் பைக் ஓட்டுவேன்: நடிகை டாப்சி

தமிழில் ‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் டாப்சி. வந்தான் வென்றான், ஆரம்பம், வைராஜா வை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது சிம்புவுடன் ‘கான்’ படத்தில் நடித்து வருகிறார். இரண்டு இந்திப் படங்களும் அவர் கைவசம் வைத்துள்ளார். 

டாப்சி பேட்மிண்டன் வீரரை காதலிப்பதாக கிசுகிசுக்களும் பரவி வருகின்றன இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என்றும் இணைய தளங்களில் செய்திகள் பரவி உள்ளன. டாப்சி டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது பைக் ஓட்டும் ஆசையை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- 

‘‘பைக், ஆண்கள் மட்டுமே ஓட்டக்கூடியது அல்ல. பெண்களுக்கும் பைக் ஓட்டும் திறமை இருக்கிறது. ஆண்களைப் போல் பெண்களும் திறமையாக பைக் ஓட்டுவார்கள். எனக்கு பைக் ஓட்ட ஆர்வம் இருக்கிறது.

சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் பைக் ஓட்ட தயாராக இருக்கிறேன். என் பெற்றோர்கள் அதற்கு அனுமதிக்க வேண்டும். அவர்கள் சம்மதம் கிடைத்தால், தாராளமாக பைக் ஓட்டுவேன்.’’ 

இவ்வாறு டாப்சி கூறினார்.


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions