பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி

Bookmark and Share

பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி

நடிகை டாப்சி மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

“நள்ளிரவில் ஒரு பெண் எப்போது தனியாக செல்ல முடிகிறதோ அப்போதுதான் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று மகாத்மா காந்தி கூறி இருக்கிறார். ஆனால் இன்றுள்ள நிலைமை அப்படியா இருக்கிறது? நிர்பயாவை ஒரு கும்பல் நாசம் செய்த சம்பவத்தை எப்படி மறக்க முடியும். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. மானபங்கம் செய்யப்படுகிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் இல்லாத இந்தியாவை பார்க்க ஆசைப்படுகிறேன் என்று இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கூறி இருக்கிறார். அதே ஆசை எனக்கும் இருக்கிறது. பாலியல் கொடுமைகளில் இருந்து பெண்கள் மீளும் நாள்தான் அவர்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும். பெண்களுக்கு எதிரான இந்த பாலியல் கொடுமைகள் தடுக்கப்பட வேண்டும்.

நான் அமிதாப்பச்சனுடன் ‘பிங்க்’ இந்தி படத்தில் பாலியல் பலாத்காரத்தில் சிக்கிய இளம்பெண் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். அதில் நடித்தபோது இந்த சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட பெண்கள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்று உணர முடிந்தது. படப்பிடிப்பில் அழுது விட்டேன். படக்குழுவினர் என்னிடம் இது கதைதான் என்று சொல்லி ஆறுதல் படுத்தினார்கள்.

பெண்கள் மதிக்கப்பட வேண்டும் அவர்களை போற்ற வேண்டும். பிங்க் படம் பார்ப்பவர்கள் பாலியல் சித்ரவதையை அனுபவித்த ஒரு பெண்ணின் துக்கத்தை உணர்வார்கள். பாலியல் குற்றங்களை குறைப்பதற்கான தூண்டுகோலாக இந்த படம் இருக்கும்.”

இவ்வாறு டாப்சி கூறினார். 


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி
கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions