நடிகையானதற்காக வருத்தப்படுகிறேன்: டாப்சி

Bookmark and Share

நடிகையானதற்காக வருத்தப்படுகிறேன்: டாப்சி

‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழில் டாப்சி அறிமுகமானார். வந்தான் வென்றான், ஆரம்பம் படங்களிலும் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். தற்போது லாரன்சுடன் முனி பேய் படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, சுருதிஹாசன், ஹன்சிகா, அனுஷ்கா உள்ளிட்ட சக நடிகைகள் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர். கைவசம் நிறைய படங்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஆனால் டாப்சியிடம் மட்டும் பெரிய படங்கள் இல்லை. அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. இதனால் வருத்தத்தில் இருக்கிறார்.

இது குறித்து டாப்சி கூறியதாவது:–

நான் அழகாக இருக்கிறேன். என்னிடம் நடிப்பு திறமையும் இருக்கிறது. ஆனாலும் படங்கள் இல்லை. இது எனக்கு வேதனையை தருகிறது. படித்துவிட்டு ஏதேனும் ஒரு பிசினஸ் செய்து தொழில் அதிபர் ஆக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். என் தலையெழுத்து நடிகையாகி விட்டேன். சினிமாவுக்கு வந்து தவறு செய்து விட்டோமோ என்று நினைக்கிறேன்.

நடிக்க வந்ததற்காக வருத்தமும் அடைகிறேன். மற்றவர்களை விட அழகும் திறமையும் இருந்தும் எனக்கு பட வாய்ப்புகள் வராதது ஏன் என்று புரியவில்லை.
இவ்வாறு டாப்சி கூறினார்.


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions