டாப்சி ஆரம்பித்துள்ள திருமணத் தொழிற்சாலை

Bookmark and Share

டாப்சி ஆரம்பித்துள்ள திருமணத் தொழிற்சாலை

ஆடுகளம் படத்தில் அறிமுகமான நாயகி டாப்சி நீண்ட இடைவெளிக்குப் பிறகு காஞ்சனா 2 படம் மூலம் தமிழில் மீண்டும் வெற்றியை ருசித்துள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு உடனடியாக அடுத்தடுத்து இரண்டு படங்கள் கிடைத்துள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக ஒரு படத்திலும், ஜெய் ஜோடியாக மற்றுமொரு படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார். காஞ்சனா 2 படம் தெலுங்கிலும் வெற்றி பெற்றுள்ளதால் அங்கும் அவருக்கு புதுப் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

இதனிடையே டாப்சி அவருடைய தங்கை மற்றும் சில தோழிகளுடன் சேர்ந்து வெட்டிங் ஃபேக்டரி என்ற திருமணத்தை நடத்தித் தரும் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளாராம்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக  ஒரு சாப்ட்வேர் இஞ்சினியராக வேலை பார்த்தவர் டாப்சி. அதற்குப் பின் மாடலிங்கில் நுழைந்த பின்னர் சினிமா நடிகையாகவும் ஆனார். 

இப்போதெல்லாம் பல நடிகைகள் சினிமாவில் மட்டும் நடிக்காமல் சொந்த கம்பெனி ஆரம்பித்து புதுப் புது வியாபாரங்களை செய்வதிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். நடிகை தமன்னா கூட ஜுவல்லரி டிசைனிங் பிஸினசை ஆரம்பித்துள்ளார்.

நடிப்பில் டாப்பில் வருகிறார்களோ இல்லையோ தங்களது சொந்த பிஸினஸில் டாப்பில் வருவதற்கு அவர்கள் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions