வாய்ப்பு கிடைத்தால்தான் நிரூபிக்க முடியும் - டாப்சி

Bookmark and Share

வாய்ப்பு கிடைத்தால்தான் நிரூபிக்க முடியும் - டாப்சி

'ஆடுகளம்' திரைப்படம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் டாப்சி. அதன் பின் சில படங்களில் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகை வரிசையில் இடம் பெற முடியவில்லை. தெலுங்குப் படங்களில் நடித்து ஓரளவிற்கு பேசப்பட்டவர் 2013ல் வெளிவந்த 'சாஸ்மி பாதூர்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு தற்போது அக்ஷய் குமாருடன் இணைந்து 'பேபி' என்ற படத்தில் நடித்தார். கடந்த வாரம் வெளிவந்த அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தில் நடித்ததைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் டாப்சி கூறியிருப்பதாவது,

“பேபி" திரைப்படம் என்னுடைய ஹிந்தி திரையுலகப் பயணத்தை வேறு ஒரு கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கிறேன். நல்ல சவாலான கதாபாத்திரம் கிடைத்தால்தான் ஒரு நடிகையால் அவர்களது திறமையை நிரூபிக்க முடியும்.

திறமையுள்ள பலருக்கும் அப்படி கிடைக்கும் போதுதான் அவர்களைப் பற்றி வெளிக் காட்ட முடியும். என்னை பலரும் கிளாமரான கதாபாத்திரங்களுக்குத்தான் பொருத்தமானவள் என நினைக்கிறார்கள்.

ஆனால், 'பேபி' படத்தைப் பார்த்த பிறகு அவர்களது எண்ணம் மாறிவிடும். காதல் திரைப்படங்களில் கிளாமரான கதாபாத்திரங்கள்தான் கிடைக்கும். அவற்றில் நடிக்காமல் விட்டுவிட்டால் என்னை விட முட்டாள் யாருமிருக்க முடியாது.

இப்பேதெல்லாம் காதல் படங்களுடன் மக்கள் நிறையே ஒன்றி விட்டார்கள். அவற்றில் சில நெருக்கமான காட்சிகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது,” என்றும் சொல்லியிருக்கிறார். தமிழில் டாப்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வை ராஜா வை' விரைவில் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
டாப்ஸிக்கு டாடா காட்டி முன்னாள் காதலியை திருமணம் செய்யும் பிரபல வாரிசு நடிகர்.!
பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி
அஜித் அறிவுரைப்படி நடக்கிறேன்: நடிகை டாப்சி
நெகட்டிவ் விமர்சனம் குறித்த அஜித்தின் கருத்து இதுதான்!
பாலியல் தொல்லையில் இருந்து மீளும் நாள்தான் பெண்களுக்கு முழு சுதந்திரம்: டாப்சி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: நடிகை டாப்சி பேட்டி
கவர்ச்சியாக நடிக்க வைத்து என் மதிப்பை குறைத்து விட்டனர்: டாப்சி பேட்டி
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி
ரசிகர் தொல்லையால் அவதிப்பட்டேன்: டாப்சி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions