குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி

Bookmark and Share

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிராக பிரசாரம் செய்வேன்: டாப்சி பேட்டி

டாப்சி நடிப்பில், காஞ்சனா-2, வை ராஜாவை ஆகிய படங்கள் கடந்த வருடம் வெளிவந்தன. தற்போது இந்தியில் 4 படங்களில் நடித்து வருகிறார்.

இதற்காக மும்பையில் முகாமிட்டு இருக்கிறார். இந்த நிலையில், வாகன ஓட்டிகளால் நடக்கும் விபத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து டாப்சி அளித்த பேட்டி வருமாறு:-

‘‘வேகமாக பைக் ஓட்டுவது சிலருக்கு போதை மாதிரி. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் உணர்வது இல்லை. எனக்கு சிறு வயதில் பைக் ஓட்ட ஆர்வம் இருந்தது.

ஆனால் கண்முன்னே நடந்த சில விபத்துகளை பார்த்த பிறகு பைக் ஆசையை விட்டு விட்டேன். வாழ்க்கை பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். விபத்துகளுக்கு அதை பலியிடக்கூடாது.

நான் படப்பிடிப்புகளுக்காக வெளியூர்களுக்கு செல்லும்போது ரோடுகளில் நிறைய விபத்துகளை பார்த்து இருக்கிறேன். மும்பை நகரம் இந்த விஷயத்தில் ரொம்ப மோசம்.

விபத்துகள் இங்கு தினமும் நடக்கின்றன. சமீபத்தில் ஒரு இந்தி படப்பிடிப்புக்காக சென்றேன். அங்கு என்னிடம் பைக்கை கொடுத்து ஓட்டச்சொன்னார்கள். மிகவும் பயந்தேன். விபத்து இல்லா பயணத்தை வற்புறுத்தி விரைவில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

இதற்காக டெல்லியில் உள்ள எனது தோழிகளை சேர்த்துக்கொண்டு புதிய அமைப்பு தொடங்க இருக்கிறேன். அந்த அமைப்பு மூலம் விபத்துகளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்வேன். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. வேகமாக ஓட்டக்கூடாது என்றெல்லாம் மக்களிடம் பிரசாரம் செய்வேன்.’’

இவ்வாறு டாப்சி கூறினார்.


Post your comment

Related News
நடிகை ரியாமிகா தூக்குப்போட்டு தற்கொலை
அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி! இதற்காக தானாம்
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
மனிதாபிமானம் இல்லாத உலகம், குமுறும் திரையுலகம் - அதிர்ச்சி புகைப்படம்.!
அரசியலில் குதிக்கும் நடிகர்கள் கொள்கை, திட்டத்தை அறிவிக்க வேண்டும் - கவுதமி பேட்டி
பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய உலக அழகி மனுஷி!
அதுல எனக்கு வெட்கமே இல்லை, கவர்ச்சிக்கு நான் ரெடி - பிரபல நடிகை ஓபன் டாக்.!
போதை காளானுக்கு அடிமையான தமிழ் நடிகர்கள் : பிரபல அரசியல்வாதி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions