கைவிரித்தார் ஆஷா.. கைகொடுத்தார் தபு..!

Bookmark and Share

கைவிரித்தார் ஆஷா.. கைகொடுத்தார் தபு..!

ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு ஒரு படத்தை ரீமேக் செய்யும்போது கதையில் மொழிக்கேற்றவாறு சில மாறுதல்களை செய்வதோடு அந்த மொழியில் கதைக்கு பொருத்தமானவர்களை தேர்வு செய்வார்கள்.

ஆனால் ஒருசில கனமான கதாபாத்திரங்களை ஒரிஜினல் படத்தில் நடித்தவர் நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்ற எண்ணம் இயக்குனர்களுக்கு தோன்றுவது உண்டு.

மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான 'த்ரிஷ்யம்' படத்தில் மோகன்லாலுக்கு அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது பெண் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த ஆஷா சரத் தான்.

சொல்லப்போனால் இடைவேளைக்குப்பின் ஆஷாவின் டெர்ரரான நடிப்பு பார்வையாளர்களை கடைசிவரை திகிலிலேயே வைத்திருக்கும். படத்தின் வெற்றிக்கு ஆஷாவும் மிக முக்கிய தூணாக இருந்தார். அதனாலேயே கன்னடத்தில் இதை ரீமேக் செய்த நம்ம இயக்குனர் பி.வாசு அந்த கேரக்டரில் ஆஷாவே நடிக்கட்டும் என விட்டுவிட்டார்.

அவ்வளவு ஏன் தமிழில் த்ரிஷ்யம் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தில் கூட ஆஷா சரத் தான் நடிக்கிறார்.  இப்போது 'த்ரிஷ்யம்' அஜய் தேவ்கன் நடிக்க. எவனோ ஒருவன் படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் டைரக்சனில் இந்தியிலும் ரீமேக்காகிறது.

ஆனால் இந்தியில் ஆஷா கேரக்டருக்கு ஆஷாவையே ஏற்றுக்கொள்வார்களா என்பதை விட, அய்யோ என்னை ஆளை விடுங்க சாமி என ஆஷாவே சொல்லிவிடுவார். பின்னே ஒரே கேரக்டரை மூன்று மொழிகளில் நடித்ததே பெரிய விஷயம் இல்லையா..? அதனால் இப்போது ஆஷாவுக்கு பதிலாக பிரபல இந்தி நடிகை தபு நடிக்கிறார்.

ஏற்கனவே சிநேகிதியே படத்தில் டெரர் போலீஸாக நடித்தவர் தான் தபு.. அதனால் இதிலும் வெளுத்து வாங்கிவிடுவார் என தாராளமாக நம்பலாம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions