த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கில் பாடிய தபு!

Bookmark and Share

த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கில் பாடிய தபு!

பாலிவுட்டின் இன்றைய இளம் நட்சத்திரங்கள் நடிப்பை தாண்டி, பாட்டு பாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மாஜி ஹீரோயின் தபுவும் இணைந்துள்ளார்.

ஏற்கனவே ஹைடர் படத்தில் ஸ்ரத்தா கபூருடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ள தபு, இப்போது த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கிலும் ஒரு அழகான பாடலை பாடியிருக்கிறார்.

அஜய் தேவ்கான், ஸ்ரேயா சரண் நடிக்கும் இப்படத்தில் தபு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றில் யாரை பாட வைக்கலாம் என இயக்குநர், இசையமைப்பாளர் யோசித்த போது நிறையபேர் தபு பாட வைக்கலாம் என்று கூறியுள்ளனர்.

அதன்படி தபு அழைத்து பேசிய போது அவரும் சம்மதம் சொல்ல இப்போது பாடலும் பதிவாகியுள்ளது. மலையாளத்தில் வசூலில் பெரும் சாதனை படைத்த படம் த்ரிஷ்யம்.

மோகன்லால், மீனா நடித்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ரீ-மேக்காகியுள்ளது. இப்போது இந்தியிலும் ரீ-மேக்காகி வருகிறது. நிஷிகாந்த் காமத் இயக்குகிறார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions